உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/மாமரம்

விக்கிமூலம் இலிருந்து

தெருவி லுள்ள மாமரம்,
தின்னத் தின்னப் பழங்களை
அருமை யோடு தந்திடும்.
அதனை ராமு பார்த்தனன்.

கல்லைக் கையில் எடுத்தனன் ;
கையை நன்கு ஓங்கினன்
பல்லைக் கடித்துக் கொண்டனன் :
பலமாய் வீசி எறிந்தனன்.

விட்ட கற்கள் பழங்களை
வீழ்த்தி விட்டுக் கிளைகளில்
பட்பட்'டென்று மோதின.
பட்டை யாவும் பெயர்ந்தன.

ஆசை கொண்டு கற்களை
அள்ளி, அள்ளி வீசினன் ;
வீசி எறிந்து பட்டைகள்
மிகவும் பெயரச் செய்தனன்.


தின்னத் தின்னப் பழங்களைத்
திருப்தி யோடு தருகிறேன்.
என்னை ஓங்கி அடிப்பதேன்?
எனது தோலை உரிப்பதேன்?

நன்மை செய்த என்னைநீ
நன்றி கெட்டு வதைப்பதேன்?”
என்றே அந்த மாமரம்
எண்ணி ஏங்க லானதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/மாமரம்&oldid=1738484" இலிருந்து மீள்விக்கப்பட்டது