உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/மிட்டாய்

விக்கிமூலம் இலிருந்து

மிட்டாய் வாங்கிடுவாய்—தம்பி
மிட்டாய் வாங்கிடுவாய்.

வட்ட வடிவ மான மிட்டாய்;
வளைந்த நிலாப் போன்ற மிட்டாய்;
முட்டை வடிவ மான மிட்டாய்;
முழுக்க முழுக்கு இனிக்கும் மிட்டாய்.  (மிட்)

எண்ண எண்ண இனிக்கும் மிட்டாய்;
எச்சில் ஊறச் செய்யும் மிட்டாய்;
அண்ணன், தம்பி, தங்கை யோடு
அப்பா கூடத் தின்னும் மிட்டாய்.  (மிட்)

பல்லும், நாக்கும் வர்ணம் தீட்டிப்
பலவி தத்தில் காட்டும் மிட்டாய்;
பல்லில் லாத பாட்டி கூடப்
பையப் பையச் சப்பும் மிட்டாய்.  (மிட்)

குழந்தை யெல்லாம் வாங்கும் மிட்டாய்;
கூடித் கூடித் தின்னும் மிட்டாய்;
அழுத பிள்ளை வர்யை மூட
அம்மா வுக்கு உதவும் மிட்டாய்!  (மிட்)

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/மிட்டாய்&oldid=1724624" இலிருந்து மீள்விக்கப்பட்டது