மாவீரர் மருதுபாண்டியர்/மருதுபாண்டியர் பட்டயங்கள், கல்வெட்டுக்கள்

விக்கிமூலம் இலிருந்து

 மருதுபாண்டியர் வழங்கிய

       பட்டயங்கள்
        கல்வெட்டுகள்

தஞ்சாக்கூர் ஓலைச் சாசனம் (கி.பி. 1784)

          முதல் ஏடு

1. சாலிய வாகன சகாத்தம் இதன்மேல் செல்லா நின்ற குறொதி ஆண்டு ஆவணி யக உ. சுக்கிரவாரமும்

2. திரையோதசி(யும்) புனர்பூசநட்சேத்திரமும் சித்திநாம யோகமுங் (கிரச வாகரன) மும் கூடின சுபயோக சுபதினத்

3. தில் தஞ்சாக்கூர்சுவாமி காவேரி அய்யன் சன்னதி தானத் துக்கு அரசு நிலையிட்ட விசய ரெகுநாதபெரிய உடையாத்

4. தேவரவர்களுக்குப் புண்ணியமாக ளுய - மானிய பெரிய மருதுசேருவை கார(ர)வர்களும் தஞ்சாக்கூரிலிருக்கும் அம்பலம்

5. சோலைத்தேவன் - காவிரித்தேவன் தண்ணாத்தேவன் - வேலத்தேவன் கூளாணித்தேவன் - சுந்தத்தேவன் டே (ற)ன் - புள்ள

6. ச்சித்தேவன் குன்னியழகன் குமாந்தத்தேவன் குமாரத் தேவன் யிந்தப் பத்துக்கரை அம்பலக்காரரும் திசைக்காவல்

7. மாரநாட்டுச்சீமை திசைக்காவல் ளுய - மருதுசேறுவை காராவர்களும் பெரிய மருது சேறுவைகாராவர்களும் தி

8. சைக்காவல் - காணியாட்சிக் கரைக்காரரும் கூடி எழுதின தர்மசாதனம் எழுதிக்குடுத்தபடி தர்மசாதன பட்டய

9. மாவது தஞ்சாக்கூர் சுவாமி காவேரி அய்யன் சன்னதி தானத்துக்கு நித்தியம் பூசை நெய்வேத்தியம் பண்ணி

10. விக்கிரதர்க்கு உம்பளம் அய்யம்பாகம் - தளை - உரு உ ட்டயூ சறுவமாணிபமாக யேர்படுத்தி நில 197

       இரண்டாவது ஏடு

11. த்துக்குள்ளவரியும் சுவந்திரம் வகைகளையுந் தள்ளிவிச்சு நிலத்துக்குள்ள குளவெட்டுஞ் சேத்துக்காணிக்கையும்

12. குடுக்கச் சொல்லியும் கிறாமத்தில் குடியிருக்கிற அம்பலக் காரர் குடியான பேர் நிலமையாளியள் - அண்ணிக்குடி - பலபட்டடை

13. க்குடி சகலரும் வீட்டுக்குக் கட்டளை குடியொன்றுக்கு வருசத்தில் ஒரு பணமுங்குடுத்து நித்தியம் பூசையுந் திரு விளக்கும்

14. பூரீபாலினமாய் ஆள சந்திராதித்தவரை சந்திரப்பிரவேஷம் வரைக்கும் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ள மட்டும் பு

15. த்திர பவுத்திரா பாரம்பரையாய் நடப்பிச்சுக் கொள்வோ மாகவும் யிந்தப்படிக்கி பட்டயத்திலுள்ள அனைவோரும்

16. சம்மதியாக காவேரி அய்யன் சன்னதிதானத்துக்கு தர்ம சாதனப் பட்டயம் எழுதிக் குடுத்தோம் இந்த தர்மசாதன

17. ப்பட்டயத்துக்கு அணிதம் பண்ணினவன் மாதாவைக் கொன்ற தோஷத்திலும் கோவதை பிறாமனானைவதை பண்ணின

18. தோஷத்திலும் குழந்தையளை வதை பண்ணின தோஷத் திலும் போவோமாகவும் இந்தத் தர்மசாதன பட்டயம் எழுதின்ேன் னாட்டுக் கணக்கு கலியுகராயபிள்ளை

19. மகன் அய்யம்பெருமாள்பிள்ளை மணியம் சொக்குப்பிள்ளை கணக்கு வெங்கிடாசலம் மய்யன் அம்பலம் சோலைத் தேவன் காவேரித்தேவன் தண்ணாத்தேவன்

20. வேல்த்தேவன் கூளாணித்தேவன் சுந்தரத்தேவன் புள்ளிச் சித்தேவன் சுந்தரதேவன் புள்ளச்சித்தேவன் குன்னியழகன் மொந்ததேவன்

21. யிதர்க்கு அசல் நிறுபம் - அரண்மனை நிறுபம் யிந்தவேட் டிலேயிருந்து அதைப் பார்த்து எழுதிய நகல் 198

22. வண்ணார் முருகன் - நாவித(ன்) திருவேட்டை - தோட்டி வீரன் சக்கி (லி) யச் சோனை

  வழங்கியவர் : தொல்லியல்துறை 
    அலுவலர்
திரு. வேதாச்சலம், எம். ஏ., மதுரை

தொண்டி கைக்களான் குளத்தின் மேல்புறம் உள்ள மதகுக் கல்வெட்டு (கி. பி. 1795)

1. சிவமயம் கலியுகம் 4896 காலி வாகன சகாப்

2. தம் 1717 இதின் மேல் செல்லா நின்ற ராக்ஷத ஆண்டு அற். ப்பசி மாதம் 27 சோமவாரமும் பஞ்சமியும் புநற்பூச நகூடித்ர

3. மும் கூடிய சுபதினத்தில் தொண்டிப்பட்டணம் கைக்களான்

4. குளம் கலுங்கு கட்டி முகிஞ்சுது ராச மானிய ரா (ன) மருது பாண்டி

6. யன் உபயம் அயூப் சகா மரைக்காயர் அதிகாரத்தில் கட்டி

முகிஞ்சுது

7. அருணாசல ஆசாரி கட்டி முகிஞ்சுது உ

வழங்கியவர் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக கல்வெட்டு ஆய்வாளர், பேராசிரியர் திரு. செ. ராஜூ, எம்.ஏ., அவர்கள் 199

சிறுவயல் செப்பேடு (கி. பி. 1800)

பூர்வத்தில் சாலிவாஹன சகாப்தம் 125க்கு மேல்நிலையான

       காணப்பேர் என்கிற காளையார்கோவில்_பூரீதிறே
  தாயுகத்தில் பிரம்மதேவன் பூசை பண்ணுகையாகவும் துவர யுகத்தில் அகஸ்தியர் பண்ணுகையாகவும் கலியுகத் தில் பூற்வம் பார்ப்பதி தபசு செய்கையால் மடவாளாகமும் காயாத கொன்றையும்
  
    சடவன்னியும் நகயுஷ்கருணி தீர்த்தமும் சவுந்தர நாயகி யம்மனும் பூசிக்கிற ஸ்தலத்தில் கிளக்கு மேற்கு வடக்கு தெற்க்கு திசை நான்கும் பிறகாறத்துக்குள்ளே சாமிமேள் யெழுதிவிச்ச
    களங்களுக்கு பேருடைய சவித்த சமாத்த நித்திய கருமானிஷ்டன பூச்சிய பலாபலன்கொண்ட சோமாஸ்கந்தர் கிறுபையாலும் மகா செனங்கள்
  யாபேர்களும் சுகசீவனாம்சத்துடன் வாள தர்ம நியாய ஆட்சி செய்து வரும் புலிப்பள்ளத்தில் புலியைக் கொன்ற - சிறுவயல் ஜெமீன்தார் வெள்ளை மருது சேர்வைக்காரர் யிந்த செப்புப்பட்டயத்தை தன்மைத்துனரான கறுத்தையா சேர்வைக்காரர் குமார் வீரபாண்டி சேர்வைக்காரர்க்கு வடியாரின் பூரீகாலி
    ஸ்வர பெருமானின் ராஜகோபுரம் கட்டும்போது சேவைக்கும் முத்துர் அரண்மனையில் அம்மனை பிறதிஷ்டை செய்து காவல் காத்து நெவேத்தியம் முதலான திருப்பணி செய்து காவல்காத்து வருவதர்க்கும் மதுரை சில்லா திண்டிக்கல் வகையறா
   விருபாகூஜி பாளையப்பட்டு மகா றாச றாச பூரீ சஜபூதி ஜமீன்
    கம்பளத்தாற் நாய்க்கன் வசம் 1800 ஆண்டு பொன்னையம்மா வெள்ளை யம்மா பெரியதாயார் நாமாச்சியம்மாள் வேலக்கள ஆகியவற்களை கணம் பொருந்திய கும்பெனியாற் துரை கைதி செய்து

கடா கூடிம்


"
வரும்படி சொன்னதின்பேரில் கோட்டை குள தெய்வமாகிய
வெகுவம்மன் சன்னதியில் சாமி கும்பிட்டு டிையாற்க்களை மீட்டு

25.வந்ததற்காக மகாறாசறாச பூணி புலி வீழ்த்தி களி கொண்டான்
வெள்ளை மருது சேர்வைக்காரர் உத்தரவின்படி தளளாய் நயினப்ப
ன் சேர்வைக்காரரால் இந்தப்படடயம் தோப்பாப்பணம் 1500

28.கட்டி குடுத்து அபிமானிச்சு தெரியப்படுத்துகிறது.

(திரு. கடனன் என்ற நடராஜன் (சிவகங்கை) Health Inspector வசமுள்ள பட்டயத்தின் நகல்)

சருகணி சருவேசுரர் கோயில் செப்பேடு (கி. பி. 1801)
(முதல் பக்கம்)



1.சுபபூரி மன் மகாமண்டலிசுபரன் அரி
யாயிர தளவிபாடன் பாசைக்கு தப்பு வார்க்க
ண்டன் மூவராய கண்டன் கண்டனாடு கொண்டு
கெர்ண்டனாடு குடாதான் பாண்டிமண்டல

5.தாபனசாரியான் சோளமண்டல பிரதிஷ்டபனா
சாரியான் தொண்ட மண்டல சண்ட பிரசண்டன்
இளமும் கொங்கும் யாட்பாணமும் கெசவேட்டை
கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன் ரா
சமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுலதிலகன்

10.இவுளி பாவடி மீதித் தேறுவார் கண்டன் மலை கலங்
கிளு மனங்கலங்காத கண்டன் அன்னதான சத்
திரசோமன் வடகரைப்புலி சாமித்துரோகிகள் தலைமீதி
த்திடும் இருதாளினான் பட்டமானங்காத்தான்
தேசி காவலன் தாலிக்கு வேலி தரியர்கள் சிங்

15.கம் இரவிகுல சேகரன் இளஞ்சிங்கம் தளசிங்
கம் ஒட்டியர் தளவி பாடணன் ஒட்டியர் மோகந்
தவிள்த்தான் துலுக்க தளலிபாடன் துலுக்கராட்டந்தவி
ள்த்தான் விகடதடமணிமகுட விக்கிரம பொற்கொடி
யை வெட்டிநிலை மீட்ட வீரசூர புசமேல் பராக்கிரம


20.வேட்டிலுந் தங்கம் வெதுப்பிலும் பச்சை னாயகமுடைய
அரசராவண சாமன் அந்தப்பிரகண்டன் மனு நீ
தி சோழன் மன்னரில் மன்னன் மன்னர்கள் தம்
பிரான் துஷ்டரில் துஷ்டன் துஷ்டர் நெஷ்டுரன் சிஷ்
டரில் சிஷ்டன் சிஷ்டர் பரிபாலன் சாமிகாரிய துர

25.ந்தரன் பொறுமைக்கு தர்மர் அறிவுக்கு அகத்தி
யன் சொல்லுக்கு அரிச்சந்திரன் குடைக்குக்கர்ணன்
பரிக்கு நகுவன் வாளுக்கு அபிமன் சாடிக்காரர்
மிண்டன் வலியசிசருவி வழியில்க் கால்நீட்டி இட ...
ரா கோடாலி எதுத்தாள்கள் முண்டன் சேதுகாவல

30.ன் செங்காவிக் குடையான் தொண்டியந்துறை காவல
ன் துரைகள் சிரோமணி அனுமக் கொடியான் அடை
யலர்கள் சிங்கம் மகரக்கொடியான் மயமன்னியர்
தம்பிரான் செயதுங்கராயர் குருமுடி சாயர் மும்முடிரா
யர் விருப்பாச்சிராயர் அசுபதி கெசபதி நரபதி செகு

35.நாதச் சேதுபதி அரசு நிலையிட்ட முத்து விசையரெ
குநாதக் கெவுரி வல்லப பெரிய உடையாத்தேவரவர்
கள் பாவத்துக்குப்பிரம்பும் புண்ணியத்துக்குள்
ளுமாகப் பிறிதிவி ராட்சிய பரிபாலனம் பண்ணி
அருளாநின்ற சாலிவாகன சகாத்த சூர எளு

40.உயங். மேல் செல்லா நின்ற துர்மதி (உறு மார்களி
உயங் சருகனிச் சறுவேரர் கோவிலுக்கு மாற
ணி முழுவதும் சறுவ மாணியமாகவும் அந்தத் கிராம
த்தில் பிரக்கிற சகல வரி யிறை சறுவ மாணியமாகவும்
தானம் பண்ணி தாம்பூர பட்டயங் குடுத்திருப்பதி

45.னாலே மாறணி முழுதுக்கும் பரினான் கெல்கைய
வது போருடைப்புக்கு தெக்கு பெரு நெல்லுர்
க் கோட்டை ஆத்துக்கு கிளக்கு செட்டியேந்தலு
வடக்கு னாமத்திக்கி மேற்கு இன்னான் கெல்
லைக்கு உள்பட்ட மாரணியில் நீதி நிட்சேபம் தரு

50.ஆபர்ணம் சித்த சாத்தியமென சொல்லப்பட்
டதும் கீழ் னோக்கிய கிணறும் மேல் நோக்கிய ம
சமும்அவிதாளி ஆவரை கொளிஞ்சி திட்டு திடல்


"புத்து புனல் இது முதலான உலக ஆஸ்த் ஆதாயமு
ம் அங்க சுங்கம் வெள்ளைக்குடை கிதாரம் கரை

55.மணியமங்களம் பட்டயவரி மடத்துவரிச்சுக்கல்வரி
... ... ... .. சருகணி கோவில் தீபதுாப நெய்வேத்
தீயம் ஆராதனைக்கு நிற்சேப தானம் பண்
ணிக் குடுத்தபடியினா லே இந்தப்படிக்கு சந்தி
ராதித்த சந்திர பிரவேசுவரைக்கும் கல்லு

60.ங் காவேரியும் புல்லும் பூமியும் உள்ளவரை
க்கும் ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும்
இந்த தர்மத்தை மேன் மேலும் பரிபாலினம்
பண்ணின பேருக்கு ஆயிரங்கோடி கண்ணியா
தானமும் ஆயிரங்கோடி லெட்சபிராமண போ

65.சனம் பண்ணி லெட்சந் தேவாலயத்தில் கற்ப
கோடி திருவிளக்கு ஏத்தும் பலனு மடைவா
ராகவும் இந்த தர்மத்துக்கு யாதொருவன்
அம்சளிவு பண்ணினால் கங்கைக் கரையில்
காராம் பசுவை மாதாவை குருவை களுத்தறு

70.த்த தோசத்தில் போவாராகவும்.

1. மருது சேர்வைக்காரர் பெண்டு பிள்ளைகள்

நாட்டிற்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களது குடும்பத்தினர் அனைவருமே கும்பெனியாரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் என்பதுதான் வரலாறு. இதில் சிவகங்கை சேர்வைக்காரர்களது குடும்பத்தினர் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல. நல்லவேளை, இவர்களையும் கும்பெனித் தனப்தி அக்கினியூ சிறையில் அடைத்து வைக்கவில்லை. ஏனெனில், சித்திரங்குடி தளபதி மயிலப்பன் சேர்வைக்காரரது மனைவியையும் சகோதரியையும் இராமநாதபுரம் கோட்டைக்குள் அடைத்து வைத்து இருந்தனர். அதேபோல அபிராமம் கிராமத்தில் தூக்கில் இடப்பட்ட மீனங்குடி (முத்துக்கருப்பத் தேவரது தம்பி) கனகசபாபதித் தேவரது மனைவியையும் குழந்தைகளையும் இராமநாதபுரம் கோட்டை சிறையில் தான் வைத்து இருந்தனர்.

பெரியமருது சேர்வைக்காரருக்கு ஐந்து பெண்டுகள் இருந்தனர். இவர்கள் மூலமாகப் பிறந்த மூன்று ஆண்மக்களும் காளையார் கோவில் போருக்குப் பின்னர் பிடிக்கப்பட்டு துக்கில் இடப்பட்டு விட்டனர். ஆதலால் எஞ்சியவர்கள் அனைவ்ரும் பெண்கள்தான். ஐந்து விதவைகளும் ஆறு பெண்மக்களும் இவர்களில் சிலருக்கு மட்டும் குடும்ப பராமரிப்பிற்காக 71 சக்கரம் 6 பணம் கும்பெனியார் கி.பி 1802ல் வழங்கி உதவி செய்து வந்தனர். ஆனால் அந்தத் தொகை கி.பி. 1804ல் நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை பின்னர் பதினேழு ஆண்டுகள் கழித்து பெரியமருதுவின் பெண் மக்களான தங்கம்மாள், ஆதிவீரலட்சுமி என்ற இருவர், கும்பெனியாருக்கு முறையீடு செய்து கொண்டதில் இருந்து தெரிய வருகிறது.[1] அப்பொழுது பெரியமருதுவின் குடும்பத்தில் முதல் இரண்டு மனைவிகளும். நான்கு பெண்மக்களும், இருபத்து ஐந்து பணியாட்களுடன் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தி வந்தது ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவர்களது அல்லலைத் தீர்ப்பதற்கு ஆதரவான உத்திரவு பிறப்பிக்கப்பட்டதாக ஆவணங்கள் எதுவும் இல்லை.

சின்னமருது சேர்வைக்காரர்களது நிலை இன்னும் மோசம். ஏனெனில் அவரது ஆண்மக்களில் துரைச்சாமியைத்தவிர எஞ்சிய ஐவரும் கும்பெனியாரால் தூக்கில் இடப்பட்டனர். துரைச்சாமியும் நாடு கடத்தப்பட்டுவிட்டார். எஞ்சியுள்ள அவரது குடும்பத்தினரும் (விதவைகள் நால்வர், மருமக்கள், பேரக்குழந்தைகள், சகோதரி, சகோதரி மக்கள்) பணியாட்களுமாக முந்நூற்று இருபத்து ஐந்து பேர் இருந்தனர்.[2] இவர்களில் சிலருக்கு கி.பி. 1804 வரை குடும்ப பராமரிப்புத் தொகையான 128 சக்கரம் 4 பணம் வழங்கப்பட்டது.[3] இந்தத் தொகையைத் தமது ஜமீன் செலவில் தொடர்ந்து கொடுப்பதற்கு ஜமீன்தார் ஒய்யாத்தேவர் ஆட்சேபனை செய்ததால், சின்னமருது சேர்வைக்காரர் குடும்பம் பண உதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.[4] கும்பெனியாரும் அவர்கள் சிவகங்கை ஜமீன்தாரிடம் பெறும் பேஷ்குஷ் தொகையில் இருந்து இந்தப்பராமரிப்புத் தொகையைக் கொடுப்பதற்கு முன்வரவில்லை. ஆதலால் அந்தக் குடும்பத்தினர் எத்தகைய சிரமங்களை அனுபவித்து இருந்தனர் என்பதை அந்தக் குடும்பத்தினர் கும்பெனியாருக்குக் கொடுத்த பல மனுக்களில் இருந்து தெரிகிறது. லூஷிங்க்டன், பாரீஸ், பீட்டர், கென்லாக் என பரங்கிக் கலெக்டர்கள் ஒருவர்பின் ஒருவராகப் பணியேற்றவர்கள், அந்த மனுக்கள் மீது பரிந்துரையுடன் சென்னைக் கோட்டைக்கு, அந்த மனுக்களை அனுப்பிவைத்தனர். ஆனால் அவர்களது இன்னல்களுக்கு ஏனோ விடிவு ஏற்படவில்லை.

ஆனால் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட குமாரசாமியின் மகன் மருது சேர்வைக்காரரை மட்டும் இராமநாதபுரம் ஜமீன் தாரிணி மங்களேசுவரி நாச்சியார் அவரது வாழ்நாள் வரை (கி.பி. 1812) பண உதவி செய்து காப்பாற்றி வந்தார் எனத் தெரியவருகிறது. பின்னர், அவரும் பரங்கியரின் பரிவிற்காக ஏங்கி, 12-5-1821ல் விண்ணப்பம் செய்து கொண்ட ஆவணம் ஒன்றுள்ளது.[5]



இவர்களது பரிதாப நிலையைப் போன்று சிவகங்கை மன்னராக இருந்த வேங்கன் பெரிய உடையாத்தேவரது குடும்ப நிலையும் இருந்தது. மன்னருக்கு நான்கு மனைவிகள். மூத்தவர் வெள்ளச்சி நாச்சியார் கி.பி. 1792ல் இறந்து போனார். காளையார் கோவில் கோட்டைப் போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மன்னரையும் காளையார் கோவில் காட்டில் பரங்கிகள் பிடித்து கைது செய்து தூத்துக்குடிக்கு அனுப்பினர். பிறகு அங்கிருந்து நாடு கடத்தி பினாங் தீவிற்கு அனுப்பிவைத்தனர். அவரது மூன்று மனைவிகளும் நான்கு பெண்மக்களும் ஆதரவின்றி அல்லல் பட்டனர். வேங்கன் பெரிய உடையாத் தேவரது தம்பி மகன் (சக்கந்தி பாளையக்காரர்) கொஞ்சகாலம் வரை, இந்த ஆதரவற்ற பெண்களுக்கு பணமும் நெல்லும் கொடுத்து வந்தார். சிவகங்கை ஜமீன்தார் பகை வரும் என்ற பயத்தாலோ என்னவோ அவரது நல்ல உள்ளமும் வேறுபட்டு, அளித்து வந்த உதவியை நிறுத்தி விட்டார்.

பினாங் தீவில், அஞ்ஞாதவாசம் செய்த வேங்கன் பெரிய உடையாத்தேவர், தமக்கு வழங்கப்பட்ட அலவன்ஸ் தொகையில் மிச்சமான தொகையைச் சேர்த்து வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கிருந்து வருபவர் வசம் தமது குடும்பத்திற்கு அனுப்பி வந்தார். அவர் அங்கேயே இறந்துவிட்டதால் அந்த வருவாயும் கிடைப்பதற்கு இல்லை. இந்த பெண் பாலர்களான இந்தக்குடும்பம் என்ன செய்யும் இறந்த கணவருக்கு எள்ளும் தண்ணீரும் இறைக்க முடியாத வறுமைநிலை-கொடுமையிலும் கொடுமை! ஆதலால் தங்களது இறுதி முடிவை கும்பெனியாருக்கு எழுத்து மூலமாக எழுதி அனுப்பினர்.[6] ஒரு மன்னரது விதவைகளுக்கு ஏற்பட்ட வேதனைகளை நிரந்தரமாக அகற்ற அவர்கள் வேறு எந்த முடிவைத் தேர்வு செய்ய முடியும்? தீயினை வளர்த்து அதில் விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ள கும்பெனியாரது 'மேலான அனுமதி”யைக் கோரி இருந்தனர். சிவகங்கைச் சீமை மன்னரது விதவைகள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரும் பயனற்றுப்போன நிலையில் அவர்கள் மேற்கொண்ட முடிவு! இந்தக் கோரிக்கையைக் கண்டு பீதியடைந்த இராமநாதபுரம் கலெக்டர் மாதம் ரூ. 100/-ஐ பராமரிப்புத் தொகையாக அவர்களுக்கு வழங்க மேலிடத்திற்கு உடனே பரிந்துரை அனுப்பினார். இந்த நடவடிக்கையின் முடிவு என்ன என்பதை அறியத் தக்க ஆதாரங்கள் இல்லை.

3 மயிலப்பன் சேர்வைக்காரர்

ராமநாதபுரம் சீமையில் உள்ள முதுகுளத்துாரை அடுத்துள்ள கிராமம் சித்திரங்குடி. ஆர்க்காட்டு நவாப்பும் கும்பெனி யாரும் கூட்டாக மறவர் சீமையைக் கைப்பற்றி இளம் மன்னரான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைத் திருச்சிக் கோட்டையில் அடைத்து விட்டு, மறவர் சீமை மக்களிடம் நிலத்தீர்வை வசூலிக்க முயன்ற பொழுது கொதித்து எழுந்து, சர்க்கார் கூலிகளைத் துரத்தி துரத்தி அடித்தவர்கள் இந்த ஊர் குடிமக்கள். மேல்நாட்டுக் கள்ளர்களை விட கொடுமையானவர்கள் என அவர்களை கும்பெனியாரது ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.1 மண்ணின் மைந்தர்தான் மயிலப்பன் சேர்வைக்காரர். இராமநாதபுரம் சேதுபதி மன்னரது விசுவாசமுள்ள ஊழியர், மானமும் வீரமும் விஞ்சிட களம் பல கண்டவர். அதனால் சேதுபதி மன்னரது அந்தரங்கப்பணியாளராகவும் விளங்கினார்.

அதனால்தான் ஆர்க்காட்டு நவாப்பின் பாதுகாப்புக் கைதியாக ஒன்பதாண்டுகள் திருச்சிக்கோட்டைச்சிறையில் இருந்து வெளிவந்து, மறவர் சீமையின் ஆட்சியில் அமர்ந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னர், ஆர்க்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தை யொழிக்க இரசியமாக பிரஞ்சு சக்கரவர்த்தி பதினான்காவது லூயியின் இராணுவ உதவியைக் கோரினார். இந்த முக்கியப் பணியில் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சு நாட்டு ஆளுநரிடம் ரகசியத் தூது சென்றவர் இந்த மயிலப்பன்தான்.

பின்னர் கி. பி. 1795ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரை கும்பெனியாரின் வஞ்சனையால் வளைக்கப்பட்டுமீண்டும் திருச்சிக்கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டபொழுது, மயிலப்பன் சேர்வைக்காரர், கோட்டைக்குள் இருந்த மன்னரை விடுவித்து மீண்டும் இராமநாதபுரம் ஆட்சிப்பீடத்தில் அமர்த்துவதற்கு முயற்சித்தார். 2அந்த முயற்சி தோல்வியுற்றதால் இராமநாதபுரம் சீமையெங்கும் கி. பி. 1797 ல் மக்கள் கிளர்ச்சி ஒன்றைத் தோற்றுவித்து கும்பெனியாரது நிர்வாகத்தைப் பணியவைக்க முயன்றார். கும்பெனியாரது ஆயுதபலம் மக்களை மடக்கியது. ஆதலால், மீண்டும் முதுகுளத்துார் வட்டார மக்களது ஏகாதி பத்திய எதிர்ப்பு வெறியை முடக்கிவிட்டு, கும்பெனியாரது ஆயுத பலத்தை ஆயுதக் கிளர்ச்சியினால் நிலைகுலையச் செய்தார். நாற்பத்து ஒரு நாட்கள் பரங்கியரைப் பலப் போர்முனைகளில் சந்தித்த இவர், சுயநலக்காரர்களது துரோகத்தால் தனது முயற்சியில் தோல்வியுற்று தஞ்சாவூர் சீமைக்குத் தலைமறைவாகப் போய்விட்டார்.

ஆறுமாதங்கள் ஆனபிறகு நிலைமையைத் தெரிந்துகொள்ள நெட்டூர் திரும்பியவர். அப்பொழுது ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியில் நின்ற சிவகங்கைச் சேர்வைக்காரர்களது ஆதரவுடன் இராமநாதபுரம் சீமையில் வெள்ளையரை இறுதிப்போருக்கு மக்களைத் திரட்டி கும்பெனித்தளபதிகள் மார்ட்டினிங், மில்லர், வெடிப்பர்டு, அக்கினியூ ஆகியோரைத் திணரவைத்தார்; என்றாலும் காலம் பரங்கிகளுக்குச் சாதகமாக இருந்ததால் மறவர்சீமையின் விடுதலை வரலாறு மருது சேர்வைக்காரர்கள் தூக்கி்ல் தொங்கியதுடன், முற்றுப்பெறாமல் முடிந்துவிட்டது.

மயிலப்பன் சேர்வைக்காரரது பேராற்றலுக்கு இடமில்லாது போயிற்று. அவருடன் போரிட்டு வீரமரண மெய்தியவர்கள் தவிர எஞ்சியவர்கள் அனைவரையும் கர்னல் அக்கினியூ பிடித்து ஆங்காங்கு தூக்கில் தொங்கவிட்டான். அவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்த கும்பெனியாரது எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த எஞ்சிய எழுபத்து மூன்று பேர்களையும் விலங்கிட்டு நாடு கடத்தி, மூவாயிரம் மைல் தொலைவில் உள்ள பினாங் தீவில் சிறை வைத்தான். என்றாலும் அக்கினியூவின் இரத்த தாகம் அடங்கவில்லை. சிவகங்கைச் சேர்வைக்காரரின் போராட்ட அணியைச் சேர்ந்த, கும்பெனியாரது கைக்கூலிகளுக்குக் கடுக்காய் கொடுத்து விட்டுத் திரிந்த கடைசி நபரான மயிலப்பனைப் பிடிக்கப் படாதபாடுபட்டான்.

இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள் தவிர திண்டுக்கல் சீமையிலும், மயிலப்பனை கண்டுபிடித்து கைது செய்ய ஏற்பாடுகள் செய்தான்-அக்கினியூ. கி.பி. 1802 ஜனவரி மாதம் பழனியில், தைப் பூசத் திருவிழாவிற்கு வந்த பண்டாரங்களையெல்லாம் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட செய்தியொன்றும் கும்பெனியார்களது ஆவணத்தில் உள்ளது.3 தாராபுரம் தாசில்தார் இத்தகைய சோதனையின் பொழுது. அவரது வினாக்களுக்குத்தக்க பதில் இறுக்கத் தவறிய அய்யாவையன் என்ற முருகபக்தனை சந்தேகப்பட்டு பழனி தாசில்தாரிடம் அனுப்பிவைத்தாராம் மயிலப்பனைப்பிடித்து விட்டதாக எண்ணிக் கொண்டு.

ஆனால் மயிலப்பனோ, கமுதி பாப்பான்குளம் வட்டங்களில் நம்பிக்கையற்ற நிலையில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பதை சிலர் கண்டு விட்டனர். மயிலப்பனைப் பிடித்துக் கொடுத்ததால் கும்பெனியார் ஓர் ஆயிரம் சக்கரம் (நாணயம்) கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அவர்களுக்குப் பேராசையை ஊட்டியது. தாங்கள் எத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுகிறோம் என்ற எண்ணமே அவர்களுக்கு எழவில்லை. மயிலப்பனது நடமாட்டத்தை அவர்கள் கவனித்து வந்தனர். அவர், இரவு நேரங்களில் மணல்குடி மூங்கில்காட்டை ஊடுருவிச் செல்லும் நேரத்தையும் கவனித்து வந்தனர். தவசித்தேவர். (மயிலப்பனது மாமன்) பெரிய வில்லித்தேவர், அய்யாக்கண்ணு சேர்வை, அரியாபதி தேவர் இன்னும் பதினொரு இழிபிறவிகள். ஒருநாள் இரவு எட்டு மணிக்கு மேல் சித்திரங்குடியில் உள்ள தனது வீட்டுக்குள் மயிலப்பன் நுழைந்தார். தமது மருமகனுக்குப் புகலிடம் கொடுப்பது போல பாவனை செய்தான். தனது மனைவியுடன் மயிலப்பன் பேசிக்கொண்டு இருந்த பொழுது வெளியே போய் துரோகிகளுக்கு தகவல் கொடுத்து விட்டான், தவசிதேவன். ஒருவாறு நிலைமையை ஊகித்துக் கொண்ட மயிலப்பன், தனது மாமனிடம்: தன்னிடம் இருந்த இருநூறு சக்கரம் பணத்தையும் அணிமணிகளைக் கொடுத்துத் தப்பிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தத் துரோகி - தனது மருமகனை (மயிலப்பன் சேர்வைக்காரர்) ஆயிரம் சக்கரம்பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுத்தான்.[7] அவனும், அவனைச் சார்ந்த பதினான்கு கழிசடைகளும் மயிலப்பனை பாய்ந்து பிடித்து பிணைந்து சிக்கல் அமில்தாரிடம் ஒப்படைத்தனர். அன்று இரவு முழுவதும் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு [8]காலையில் இராமநாதபுரம் பேஷ்காரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

கும்பெனியாரது கொடிய எதிரி, கர்னல் அக்கினியூக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மறவர் சீமையின் மாவீரன் மயிலப்பன் அவரது முந்தைய பணியிடமான இராமநாதபுரம் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் பாளையங் கோட்டை ராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டார். கலைக்டர் லூவிங்க்டன் அவர் மீது நீதி விசாரணை நாடகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டான். அதற்காகக் கும்பெனித் தலைமை நடுவர் குழு ஒன்றை நியமித்தது. குதிரைப்படையின் இரண்டாவது அணி தளபதி மேஜர் பர்ரோஸ் குழுத் தலைவர். மூன்றாவது அணியின் தளபதி லெப்டினென்ட் நோவல்ஸ், முதலாவது காலாட்படை அணியின் தளபதி கேப்டன் ஒஹா டிராட்டரும், குழு உறுப்பினர்கள். [9]மயிலப்பன் சேர்வைக்காரருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது கலெக்டர் லூவிங்க்டனது அவா ஆகும்.[10]அதற்காக மறவர் சீமையின் பல பகுதிகளிலிருந்தும் பாமர மக்களை அச்சுறுத்தி, மயிலப்பன் சேர்வைக்காரருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு செய்தான். இதோ அந்தக் கோழைகளின் பட்டியல்.[11]

1. ஆறாயிரம் பிள்ளை - அபிராமம் (கும்பெனியாரது ஊழியன்)
2. ஆர்த்த தேவர் - கமுதி
3. கஸ்துாரி செட்டி - கமுதி (சிறுவியாபாரி)
4. சுப்பன் செட்டி - கமுதி-(கும்பெனியாரது கச்சேரியில் வடிராப் பணி
5. குமாரசாமி - கொடுமலூர்
6. குமாரவேலு - மனலூர்
7. முத்தையா பிள்ளை - முதுகுளத்துார் (கும்பெனியாரது ஊழியர் - அம்பலகாரர்)
8. பெரிய மீரான் - மேலப்பெருங்கரை
9. மரக்காணன் - முதுகுளத்தூர் (அம்பலகாரர்)
10. வெங்கடாசலக் கோன் - அபிராமம் (அம்பலகாரர்)
11. குமரன் - முதுகுளத்துர் (அம்பலகாரர்)
12. உடையார் - சித்திரங்குடி (சேர்வைக்காரர்) (மயிலப்பனது மைத்துனர்)
13. பழனியப்ப பிள்ளை - சித்திரங்குடி (மணியக்காரர்)
14. ரெங்கசாமி நாயக்கர் - பேரையூர் - (விவசாயி)
15. வேலு முக்கந்தன் - முதுகுளத்துார் (விவசாயி)
16. முத்துச்சாமி - கிடாரத்திருக்கை
17. கறுப்பநாதன் - கடலாடி
18. முத்து இருளாண்டி - கடலாடி (அம்பலக்காரர்)
19. கன்னையன் -


இவர்கள் அனைவரும் கிளிப்பிள்ளைகளைப் போல மயிலப்பன் சேர்வைக்காரர், அவர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்ததையும், கும்பெனியாரது கிட்டங்கிகளில் உள்ள தானியத்தை கொள்ளை கொண்டதையும் சாட்சியம் சொன்னார்கள். ஆனால் கலெக்டர் லூசிங்டனும் மேஜர் ஷெப்பர்டும் இந்தச் சாட்சியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், கி. பி. 1799 ஏப்ரலிலும் கி.பி. 1801 பிப்ரவரியிலும் மயிலப்பன் சேர்வைக்காரர் முதுகுளத்துர், அபிராமம், கமுதி ஆகிய ஊர்களில் கும்பெனியாரது கச்சேரிகளைத் தாக்கியது, அவர்களது வீரர்களைக் காயப்படுத்தி ஆயு தங்களைப் பறித்துச் சென்றது. கும்பெனி நிர்வாகத்துக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினர்.[12] இந்தக் குற்றச்சாட்டுகளை மறுதலித்த மயிலப்பன் சேர்வைக்காரர் தமது வாக்குமூலத்தில், தன்னுடைய தலைவரது கட்டளைகளுக்குப் பணிந்து செயல்படுவது ஒரு போர் வீரனது கடமையாதலால் தானும் அந்தச் சூழ்நிலையில் செயல்பட்டதாகவும், கடமையை நிறைவேற்றியதற்குத் தண்டனை என்றால் அது தனது விதி வசம் என்று ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப் பிட்டார்.[13]

விதி வலிது என்பதை பாளையங்கோட்டை ராணுவ நீதிமன்ற தீர்ப்புரை உறுதிப்படுத்தியது. மறவர் சீமை மண்ணிலிருந்து பரங்கியரை விரட்டியடிக்கப் பாடுபட்ட குற்றத்திற்காக மயிலப்பன் சேர்வைக்காரருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. என்றைக்கு மருது சேர்வைக்காரர்கள் திருப்பத்தூரில் தூக்கில் தொங்க விடப்பட்டார்களோ அன்றே மயிலப்பன் சேர்வைக்காரரது மரணச் சீட்டும் எழுதப்பட்டு விட்டது, அபிராமத்தில் அந்தத் தண்டனையை நிறை வேற்றுமாறு கும்பெனிப் படையின் தளபதிக்கு உத்திரவு வழங்க சென்னை கவர்னரை நீதிமன்றம் கோரியது. அந்த வேண்டு கோளை ஏற்று கவர்னரும் உத்திரவிட்டார்.[14] ஏற்கனவே மீனங்குடி கனகசபாபதி தேவரது உயிரை உறிஞ்சிய அதே தூக்குமரம், மறவர் சீமையின் மாவீரன் முத்துராமலிங்க சேதுபதியின் விசு வாசமிக்க தொண்டன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் இணையற்ற தளபதி-மயிலப்பன் சேர்வைக்காரது மூச்சையும் பறித்து அவரது வாழ்வை முடிவுறச்செய்தது.

ஆனால் இராமநாதபுரம், சிவகங்கை சீமைகளில் உள்ளவர்கள் மயிலப்பன் மறைவை உண்மை என்று கொள்ளத் தயங்கினர். கி.பி. 1799 முதல் கி.பி.1801 வரையிலான கும்பெனியாரது ஆவணங்களும் மயிலப்பன் சேர்வைக்காரரை ஒரு சாதாரண குடிமகனாக எண்ணுதற்கு இடமில்லாது மந்திர தந்திரம் மிகுந்த மாயாஜால மனிதனாக நினைக்கும் வகையில்தான் வரைந்துள்ளன. நமது நாட்டு விடுதலை அவரது நினைவுக்கு என்றும் வீரவணக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

4. மாவீரன் துந்தியா

துந்தியா வாக் என்பவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். மைசூர் மன்னர் திப்புசுல்தானது போர்ப்பணியில் குதிரைப் படைப் பிரிவின் தலைவராக இருந்தார். அவரது உள்ளத்தில் ராஜபக்தியும், தேசபக்தியும் கொழுந்துவிட்டு எரிந்தது. மைசூர் அரசுக்கு கும்பெனியார் இழைத்து வந்த கொடுமைகளால் குமுறி னார். இறுதியாக பரங்கிகள் திடீரென பூரீரங்கபட்டிணத்தை நயவஞ்சகமாகத் தாக்கி, திப்பு சுல்தானைக் கொன்றதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பூரீரங்கப்பட்டன வீழ்ச்சிக்குப் பிறகும். இழிவாக நடத்திய விதமும் துந்தியாவின் உள்ளத்தில் ஒருவிதமான பழி உணர்வை வளர்த்தது. திப்புச்சுல்தானது ஏனைய தளபதிகளுடன் துந்தியாவும் சிறிதுகாலம் போர்க்கைதியாக பரங்கிகளது பாதுகாப்பில் இருந்து வந்தார்.

ஆனால் விடுதலை பெற்றவுடன், தம்மை யொத்த நாட்டுப் பற்றுமிக்க நல்லவர்களைத் தமது அணியில் திரட்டினார். ஏற்கனவே திப்புசுல்தானது மைசூர்ப் படையணியைச் சேர்ந்த போர் வீரர்கள் பலரும் அவரது விடுதலை முன்னணியில் சேர்ந்தனர். அவர்களது ஆதரவுடன் மைசூர் அரசுக்கு சொந்தமானதும் கும்பெனிக் கைக்கூலிகளது ஆக்கிரமிப்பில் இருந்த பல போர் நிலைகளையும் கோட்டைகளையும் கைப்பற்றினார். பல இடங்களில் கும்பெனிப்படைகளுக்கும் மைசூர் விடுதலை அணிக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. ஆனால் இறுதி வெற்றி பரங்கிகள் பக்கம்தான் இருந்தது.[15]

இதற்கிடையில் துந்தியா மராட்டம், வயநாடு கொங்குநாடு, திண்டுக்கல் சீமை, சிவகங்கைச்சீமை - ஆகிய பகுதிகளில் உள்ள நாட்டுத்தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். கொள்ளிடத்திற்குத் தெற்கே உள்ள அனைத்துப் பாளையப்பட்டுக்களும் (புதுக்கோட்டைத் தொண்டமானும், கோபி பாளையக்காரர் நீங்கலாக) அனைவரும் துந்தியாவின் பரங்கியர் எதிர்ப்புத் திட்டத்திற்குப் பக்க பலமாக இருந்தனர்.[16] குறிப்பாக, திண்டுக்கல் சீமையில் உள்ள விருப்பாட்சி பாளையக்காரர். மிகவும் தீவீரமாக துந்தியாவின் சார்பாகச் செயல்பட்டார். அனைத்துத் தலைவர்களும் திண்டுக்கல் கோட்டையில் ரகசியமாக கூடி கும்பெனியாரது ஆதிக்கப் பேராசையை அடியோடு களைந்து எறிவதற்காக இயக்கமொன்றை நாடு தழுவிய இயக்கமாகத் தொடரு வதற்குத் திட்டங்களைத் திட்ட துந்தியா துணைபுரிந்தார். இவர்களது முதல் தாக்குதல் 3.6.1800ல் கோயம்புத்துாரில் உள்ள கும்பெனி அணியை நாசமாக்குதல் என்பது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திப்புசுல்தானது முன்னாள் கோயம்புத்துார் பிரதி நிதியான சுப்பாராவ் என்பவர் துடிப்பாக செயல்பட்டார். பக்கத்தில் உள்ள பாளையக்காரர்களை அணுகி அவர்களது ஆதரவைப் பெற்று, அன்று இரவு கும்பெனியாரையும் அவர்களது கைக்கூலி களாக ராஜ்புத், முஸ்லிம் அணிகளைத் தகர்க்க, எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் கோயம்புத்துருக்குப் பத்துக் கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் திரண்டு இருந்தனர்.[17]

மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த ஏற்பாடு முழுவதும், சில துரோகிகளால் கோயம்புத்துார் கும்பெனித் தளபதியான மெக் காளியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரைத் தாக்குவதற்கு முன்னர் கும்பெனி அணிகள் கிளர்ச்சித் தலைவர்களைத் திடீரென கைது செய்தனர்.[18] திட்டம் தகர்க்கப்பட்டது. கும்பெனித் தலைமை உத்திரவின்படி நாற்பத்து இரண்டு கிளர்ச்சிக்காரர்கள் தூக்கில் தொங்கினர். அவர்களில் இருபத்து இரண்டு பேர் (கோவையில் 6, தாராபுரம் 8 பேர், சத்திய மங்கலம் 7 பேர், உருமாத்துர்-1) துக்கிலிடப்பட்டனர்.

அடுத்து, வடநாட்டில் துந்தியாநாகைப் பின்பற்றி, விட்டால் ஹெகாடா என்பவர் பரங்கியரைத் தொலைத்து அழிப்பதற்கு ஏற்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இவரது இயற்பெயர் நரசிம்ம என்பது. இவரது இந்தப்பொது நோக்கிற்கு இவரது உறவினர்களுடன் மைசூர் மன்னர் திப்பு சுல்த்தானது மூத்த மைந்தர் புட்டா ஹைதரும் சுப்பாராவ் என்ற கன்டை பிராம்மண ரும், உற்ற துணையாக இருந்தனர்.[19] பல இடங்களில் கும்பெனியாருடன் கிளர்ச்சிக்காரர்கள் மோதினர். கலெக்டர் மன்றோவின் திட்டப்படி, கும்பெனியார் விட்டல் தலைமையிலான கிளர்ச்சிக் காரர்களை பல இடங்களில் 9-8-1800க்கும் 18-8-1800க்கும் இடைப்பட்ட பத்து நாட்களில் பல மோதல்களில் முறியடித்தனர். கிளர்ச் சித்தலைவர்கள் பிடிக்கப்பட்டு 22.8-1800ம் தேதி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.[20] வீரன் விட்டலது குடும்பத்தினரை வெகு தொலைவில் உள்ள பூரீரெங்கப்பட்டணக் கோட்டையில் சிறை வைத்தனர். மீண்டும் அவர்களும் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்துவிடாமல் இருப்பதற்கு கும்பெனியாரது ஆவணங்கள் விட்டலை “பயங்கரமான, அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரராக” வர்ணித்துள்ளன.[21] வயநாட்டுக் கிளர்ச்சி முடிந்தவுடன் கும்பெனியாரது அனைத்து அணிகளும் பல பகுதிகளில் இருந்து துந்தியாவை இலக்காகக் கொண்டு முடுக்கிவிடப்பட்டன.

இவை அனைத்திற்கும் கூட்டுப்பொறுப்பாக ஆர்தர் வெல்லெஸ்ஸி நியமிக்கப்பட்டான். மைசூர் இறுதிப்போரை நடத்தி திப்புசுல்தானைத் தோற்கடித்த மாவீரனாக கும்பெனியாரால் போற்றப்பட்ட அந்த தளபதிக்கு சகல உதவிகளையும் வழங்கி உதவுமாறு கும்பெனியாரது தலைமை, ஹைதராபாத் நிஜாமையும், மராட்டிய மன்னர்களையும் கேட்டுக் கொண்டது. கர்னல் பெளவேடிர், மேஜர் பிளாக்கி, மேஜர் மக்காலிஸ்டர், கேப்டன் கில்பாட்ரிக் - ஆகிய இராணுவத்தலைவர்கள், கோயம்புத்துார், மங்களுர் ஹைதராபாத், பம்பாய் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் அணிகளுடன் துந்தியாவை "மனித இனத்தின் வைரியை” (அவர்களது நோக்கில்) தாக்குவதற்குப் புறப்பட்டனர். மராட்டிய மாநிலத்தில், கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரா நதிக்கும் இடைப் பட்ட தோவாப் சமவெளியில் பல இடங்களில் - தம்மூல், ஹண்னுர், ஹாங்கல், லீமாவில் கிர்ஹட்டி, அங்கோரே, இமலாபாத் ஆகிய ஊர்களில் துந்தியாவின் கிளர்ச்சிக்காரர்கள் படைகளுக்கும் கும்பெனியாரது அணிகளுக்கும் இடையில் பல போர்கள் நிகழ்ந்தன. ஆனால் அப்பல்பரி என்ற ஊருக்கு அருகில் 215

நடைபெற்ற உக்கிரமான போரில், துந்தியாவின் படைகளை கும்பெனியாரது பீரங்கிகள் துவம்சம் செய்தன. மாவீரன் துந்தியாவும் போர்க்களத்தில் வீரமரணம் எய்தினார்.[22] விடுதலைப் பள்ளுபாடிய வீரக்குயில் மறைந்தது. தவழ்ந்து சென்ற தென்றலில், தயங்கிச் சென்ற அந்தப்பள்ளு, என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

5 ஜமேதார் முகம்மது காலிது

அருஞ்சாதனைகளைக் செய்த அரிய வீரர்களை மட்டுமல் லாமல், ஆண்மையும் வீரமும் இல்லாத துரோகிகளையும் கூட வரலாறு நமக்கு இனங்காட்டி வந்துள்ளது. அந்த வகையில் சிவகங்கைச் சீமையின் வீரவரலாறு, துரோகி முகம்மது காலிதுவையும் நினைவூட்டுகிறது. பெரும் பொருளை அன்பளிப்பாகப் பெறு வதற்காக, பிறந்த மண்ணின் மகத்தான பாரம்பரியத்திற்கு மாசு சேர்த்த மனிதப்பதடி. இவனது சொந்த ஊர் தெரியவில்லை. ஆனால் தஞ்சை மராத்திய மன்னரது குதிரைப்படையணியில் பணியாற்றியவன் என்பது தெரியவருகிறது. கி.பி. 1782ல் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த வெள்ளைப்பரங்கிகள் மீது திடீரென மின்னல் தாக்குதல் நடத்திய பொழுது திப்புசுல்தானது இரும்புப் பிடியில் இருந்து தப்பி உயிர் பிழைக்க சென்னை ஓடினான். அங்கே சிறிது காலம் கும்பெனித் தளபதி காட்பிரே என்பவனது சேவகத்தில் அமர்ந்தான். அவனது பணியில் ஆட்குறைப்பு ஏற்பட்டு பதவி இறக்கம் ஏற்பட்ட பொழுது கி.பி. 1784ல் ஆர்க்காட்டு நவாப்பினது பணியில் சுபேதாராகச் சேர்ந்தான். சிவகங்கைச் சீமைக்கு அனுப்பப்பட்டான். கி.பி. 1791ல் கும்பெனியார் ஆர்க்காட்டு நவாப்பின் பேஷ்குஷ் தொகை வசூலுக்கு, நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டபொழுது, பணியில் மீண்டும் ஆட்குறைப்பு ஏற்பட்டதால், வேறு வழி இல்லாமல் திருப்பத்துரில் தங்கி வாழ்ந்து வந்தான்.[23] கி.பி. 1801ம் ஆண்டின் பிற் பகுதியில் மக்கள் எழுச்சி பெற்று மருதுபாண்டியரது அணியில் சேர்ந்து கும்பெனிப்படைகளுடன் மோதி வந்த பொழுது இவனும் போராளிகளுடன் சேர்ந்து அரண்மனை சிறுவயல் காட்டுப் போரில் கும்பெனியாரால் பிடிக்கப்பட்டான். தளபதி, அக்கினியூ முன்னர் நிறுத்தப்பட்டான். அக்கினியூவின் ஆசைவார்த்தைகளில் மயங்கி போராளிகள் பற்றி அவன் அறிந்து இருந்த அனைத்து விபரங்களையும் அக்கினியூவிடம் கக்கிவிட்டான். அத்துடன் காளையார் கோவில் கோட்டைக்கு அரண்மனை சிறுவயல் காட்டுவழியாக எளிதாகச் சென்று அடையக்கூடிய இரகசிய வழியையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தான். அரண்மனை சிறுவயல் காட்டில் ஒவ்வொரு அடி மண்ணிற்கும், மரணப்போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த கும்பெனியாருக்கு துரோகி முகம்மது காலித் அறிவித்த விவரங்கள். அவர்களது வெற்றி வாய்ப்பை விரைவு படுத்தும் அற்புத மருந்தாக இருந்தது. தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் துரோகிக்கு பொன்னும் பொருளும் வழங்கு அக்கினியூ பாராட்டினான்.[24]

காளையார் கோவில் போர் முடிந்தவுடனேயே, அக்கினியூ கும்பெனியாருக்கு எழுதி துரோகி காலிதுக்கு தகுந்த சன்மானம் வழங்க கும்பெனித்தலைமைக்குப் பரிந்துரை அனுப்பினான். கும் பெனியாரும் அவனுக்கு மாத ஓய்வு ஊதியமாக இருபது ஸ்டார் பக்கோடா வழங்கி உதவினர்.[25] அவன் திருச்சிராப்பள்ளி சென்று எஞ்சிய வாழ்க்கையை அங்கேயே கழித்தான்.

6. சிவகங்கை சரித்திரக் கும்மியும், அம்மானையும்

மதுரைத் தமிழ்ச்சங்க சுவடித் தொகுப்புக்களில் இருந்து பெறப்பட்ட இந்த இரண்டு சிற்றிலக்கியங்களையும் சென்னை அரசின் கீழைச் சுவடி காப்பகத்தினர் 1952 ல் அச்சேற்றி வெளியிட்டனர். இது வரை, தமிழில் வரையப்பட்டுள்ள வரலாறு சம்பந்தப்பட்ட நாடோடி இலக்கியங்களான “இராமப்பையன் அம்மானை” “ராஜா தேசிங்கு”கான்சாகிபு” ஆகியவை போன்று அல்லாமல், இந்த இலக்கியங்களின் அமைப்பு மிகுந்த வேறுபாடுகளுடன் விளங்குகின்றன. நாடோடி இலக்கியங்களுக்காக உத்திகள், சந்தங்கள் இல்லாமல், செய்திகளைத் தெரிவிப்ப தற்காக மட்டுமே இவை புனையப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. செய்திகளும் காலம், களம் ஆகியவைகளைக் கடந்து வரலாற்றுக்கு முரணாகக் காணப்படுகின்றன.

ஆர்க்காட்டு நவாப் இராமநாதபுரம் மீது படை எடுத்து வருகிறார். முத்து இருளப்ப பிள்ளையினால் இந்தப் படையெடுப்பை வெல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டவுடன், அரசியார் “முத்திரை மோதிரத்தை சாத்தி”, முத்து இருளப்பப் பிள்ளையைப் பிரதானியாக்குகிறார். இராமநாதபுரம் அரசியாரும் நவாப்பிற்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முனைகிறார். (சிவகங்கை கும்மி. பக்கம் 15) இந்தப் படையெடுப்பு நிகழ்ந்தது கி. பி. 1772 மே மாத இறுதி. அப்பொழுது பிரதானியாக இருந்தவர் பிச்சை பிள்ளை என்பவர் முத்துஇருளப்ப பிள்ளை பிரதானியாகப் பணியாற்றுவது விஜயரகுநாத முத்து இராமலிங்க துேச பதியின் ஆட்சியில் (கி. பி. 1784-91 ல்)

பிரதானி முத்து இருளப்ப பிள்ளை, ஆறுமுகம் கோட்டையைத் தாக்க முனைந்த பொழுது நவாப் பயந்து, இராமநாதபுரம் படையெடுப்பை நிறுத்தி சிவகங்கைச் சீமை மீது பாய்ந்தார் (சிவகங்கை கும்மி பக்கம் 17 சிவ. அம்மானை பக். 115) ஆனால் ஆர்க்காட்டு நவாப்பின் மைந்தன் உம்தத்துல் உம்ரா, கும்பெனித்தளபதி, ஜோசப் சுமித் ஆகியோரது கூட்டுத் தலைமையிலான படைகள் மூன்று நாட்களாக இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கி 2-6-1772 ல் கோட்டையைக் கைப்பற்றியதுடன் அரசியாரையும் இளவரசரையும் கைது செய்து திருச்சி சிறையில் இட்டனர் என்பது வரலாறு.

23.6.1772 அன்று காளையார் கோவில் கோட்டைப் போரில், சிவகங்கை மன்னர் வீரமரணம் அடைந்ததும், பிரதானி தாண்டவராய பிள்ளை, அரசி வேலு நாச்சியாரையும் அவரது பெண் குழந்தையையும் பத்திரமாக சிவகங்கைக்கு வடக்கே உள்ள மைசூர் அாசுக்குச் சொந்தமான விருபாட்சிக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் பெற்றார் என்பது வரலாறு. ஆனால் கொல்லங்குடியில் இருந்த வேலு நாச்சியாரைச் சிவிகையில் ஏற்றி, மருது சகோதரர்களே மேலுர் வரை சுமந்து சென்றதாகவும் பின்னர்

திண்டுக்கல் சென்று திப்புச்சுல்தானைச் சந்தித்து ஆதரவு பெற்றனர் என்பது சிவகங்கை கும்மி செய்தி (பக்கம் 21. 23). திப்பு சுல்தானது உதவி பெற்று சிவகங்கைச் சீமையை மருதிருவர் மீட்டனர். (சிவகங்கை சீமை கும்மி, பக்கம் 115). காளையார் கோவில் கோட்டைப் போர் முடிவுற்ற பொழுது மைசூர் மன்னராக இருந்தவர் ஐதர் அலி, பகதூர். திண்டுக்கல் கோட்டையில் இருந்து மருது சகோதரர்களுக்கு ஆயுத உதவி வழங்கி, சிவகங் கையை கி. பி. 1781 ல் மீட்க உதவியவரும் அவரே. மேலும் திப்பு சுல்தான் மைசூர் மன்னராக கி. பி. 1782 இறுதியில் தான் முடி சூடிக் கொண்டார். இவ்விதம் செய்திகள் வரலாற்றுடன் இணைந்ததாக இல்லை.(இன்னும் ஒரு வேடிக்கை! மருது சகோதரர்கள் முக்குளத்தில் மொக்கைப் பழனி சேர்வைக்காரர் என்பவருக்கு மக்களாகப் பிறந்தவர்கள். ஆனால் இவர்கள் சிவகங்கைப் பிரதானி தாண்டவராய பிள்ளையின் மக்கள் என்றும் பிரதானிக்கு வயது அதிகமாகிவிட்டதால் அவரது மக்களான மருது சகோதரர் அடைப்பம் பணியை ஏற்றனர் என்ற செய்தியை சிவகங்கை கும்மி (பக்கம் 10-11) சொல்கிறது.

மேலும், ஆர்க்காட்டு நவாப், கும்பெனியாருக்கு தமிழகத்தைத் தொன்னூற்று ஆறு ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்து விட்டதால், மருது சகோதரர்கள், சென்னை சென்று கும் பெனி கவர்னரைச் சந்தித்து “அவரது ஆதரவு பெற்ற கும்பெனி யாரது பிள்ளைகளாக” கப்பம் ஏதும் இல்லாமல் சிவகங்கையை ஆளும் உரிமை பெற்றுத் திரும்பினார்கள். (சிவ, கும்மி பக்கம் 34) ஆனால் வரலாறு அப்படி அல்ல. சிவகங்கைச் சீமையை கி.பி. 1781ல் மீட்ட மருது சகோதரர்கள் ராணி வேலு நாச்சியாரது பிரதானிகளாக தன்னாட்சி செலுத்தி வந்தனர். என்றாலும் கி.பி. 1784ல் ஆர்க்காட்டு நவாப், கும்பெனித்தளபதி புல்லர்ட்டனை சிவகங்கைக்கு அனுப்பி கப்பத்தொகையை வசூலித்தார். கும் பெனியாருக்கு எதிரான போர்க்கொடி தூக்கிய காலம் வரை (கி.பி. 1800) முன்னர் நவாப்பிற்கும், பின்னர் அவரது குத்தகைதாரரான கும்பெனியாருக்கும் சிவகங்கை பிரதானிகள் கப்பம் செலுத்தி வந்தனர். மற்றும் மதகுப்பட்டி காட்டில் அலைந்து கொண்டிருந்த சின்ன மருது, கும்பெனித் தளபதி அக்கினியூவைக் கண்டவுடன் தமது வளரித்தடியை வீச கையை ஓங்கியதாகவும், அப்பொழுது பச்சை வாதநோய் சின்னமருதுவைத் தாக்கியதால் போரிட முடியாமல் கும்பெனியார்களால் பீடிக்கப்பட்டார் என்பது சிவகங்கை கும்மி (பக்கம் 87) ஆசிரியரது கண்டு பிடிப்பு. ஆனால் தன்னந்தனியாக இருந்த சின்னமருதுவை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தி கும்பெனியார் கைது செய்தனர் என்பது வரலாறு.

இவ்விதம் தமிழக வரலாற்றிற்குப் புறம்பான செய்திகளை இந்த இரு இலக்கியங்களும் அளிக்கின்றன. சிவகங்கை கும்மியை விட சிவகங்கை அம்மானை கூடுதலான செய்திகளைக் கொண்டுள்ளது. அத்துடன், மருது சேர்வைக்காரர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு வேள்விக்கு ஆகுதியாகத் தங்களையே அளித்துத் தியாகிகளான பல போர் மறவர்களையும் இந்த இலக்கியங்கள் இனங் காட்டத் தவறி விட்டன. அவர்கள் குறிப்பாக, சித்திரங்குடி மயிலப்பன், மீனங்குடி முத்துக்கறுப்பத்தேவர், ராஜசிங்கமங்கலம் குமாரத் தேவன், ஜகந்நாத ஐயன், சபாபதித்தேவர், காடல்குடி நாயக்கர், கள்ளர் தலைவர் சேதுபதி, மற்றும் நத்தம், திண்டுக்கல், விருபாட்சி பாளையக்காரர்கள், ஆகியோர் ஆவர்.

ஆனால் பிற்கால எழுத்தாளர்களும், நூலாசிரியர்களும், இவ்வளவு குறைபாடுடைய இந்த இலக்கியங்களில் காணப்படும் செய்திகளை உண்மையான, ஆதாரமான வரலாறாக தங்களது ஆக்கங்களில் அப்படியே பயன்படுத்தி இருப்பது மிகச் சிறந்த விடுதலை வீரர்களான மருது சேர்வைக்காரர்களது மகத்தான வரலாற்று வடிவத்தை மாசுபடுத்தி இருப்பதாகும். மிகச் சாதாரண சேர்வைக்காரர் குடும்பத்தில் பிறந்து, தங்களது உழைப்பாலும், அரிய ஆற்றலாலும், சிவகங்கைச் சீமையின், அரசியல் சமூகத் தகுதிகளை மாற்றி வரலாறு படைத்த அந்த வல்லவர்களை, தமிழ் நாட்டில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை வேரறுக்க விடுதலைப் போரைத் துவக்கிய அந்த விந்தை மனிதர்களை, சிவகங்கைச் சீமையின் மன்னர் பரம்பரையினரைப் போல, வெறும் புகழ்ச்சியாக, மருது மன்னர், மருது அரசர், மருதேந்திரர் மருது துரை என வரைந்து இருப்பதும் விரும்பத்தகாததொன்று.

கி.பி. 1781 முதல் 1801 வரை இருபது ஆண்டுகள், இடையில் ஒரு சில ஆண்டுகள் தவிர, மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமையின் பிரதானிகளாகத்தான் பணியாற்றி வந்தனர். கி.பி. 1790 வரை சிவகங்கை ராணிவேலு நாச்சியாரது பிரதானியாகவும் பின்னர் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரது பிரதானியாகவும் செயல்பட்டனர். சிவகங்கைச் சீமை மக்களுக்குத் தேவையானவற்றைச் செயல்படுத்துவதில், மிகுந்த சுயேச்சையுடன் அவர்கள் செயல்பட்டு வந்தபொழுதும், அவர்களது கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், சிவகங்கைச்சீமை மன்னராக அல்லாமல், ராஜமான்யர் என்றே குறிப்பிடுகின்றன. அதேபோல அவர்களுக்கும் கும்பெனித் துரைத்தனத்திற்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களிலும், “சிவகங்கை சேர்வைக்காரர் (பிரதானிகள்)” என்ற சொற்கள்தான் குறிக்கப்பெற்றுள்ளன. சிவகங்கை மன்னர் என்றோ அல்லது பாளையக்காரர் என்ற சொற்றோடர்களோ அவைகளில் காணப்படவில்லை.

7. மருதுபாண்டியர் திருப்பணிகள்

சிவகங்கைச் சீமை மேற்கிலும், தெற்கிலும், சில பகுதிகளைத் தவிர, பெரும்பாலான பகுதி, காடும், மலையும் பாலையும் நிறைந்த வறண்ட பகுதியாகத்தான் இருந்து வந்தது. ஆதலால் அங்குள்ள மக்களுக்கு பெரிதும் விவசாயம் செய்வதற்கான வசதிகள்தான் அன்று தேவைப்பட்டன. காலத்தில் பெய்யும் மழை நீரையும் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று நீரையும் தேக்கி பயன்படுத்துவதற்கான முறையில் மருது சேர்வைக்காரர்கள் ஆங்காங்கு குளங்களையும் கண்மாய்களையும் வெட்டுவித்தனர். மட்டியூர், கண்டிராமாணிக்கம், தெற்குப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள பெரும் கண்மாய்கள் அவர்களது வளர்ச்சிப் போக்கினைச் சுட்டும் திருப்பணிகளாக உள்ளன. தொண்டி கைக்கோளன் ஊரணியிலும், திருவேகம்பத்து கண்மாய் கலுங்குகளிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், அவர்கள் வாய்க்கால் வகுத்த பாங்கினை பறை சாற்றுகின்றன.

மக்களது பணிக்கு அடுத்ததாக, அவர்கள் மகேசனுக்கு இயற்றிய தொண்டுகளும் ஏராளம். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு தேர்வடித்துக் கொடுத்ததுடன் நிலக்கொடைகளையும் வழங்கியுள்ளனர். அவையும் பிறவும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நந்தா விளக்குகளுக்கு ஆவியூர், மாங்குளம், கடம்பங்குளம், சீகன் ஏந்தல், மங்கை ஏந்தல், பூவன் ஏந்தல்.
2. காளையார் கோவில் தேர் மழவராயன் ஏந்தல்
3. குன்றக்குடி குமரன் கோயில் செம்பொன்மாரி
4. திருமோகூர் கார்மேகப் பெருமாள் கோயில் மாங்குடி மானாகுடி
5. சருகனி தேவமாதா ஆலயம் கருகனி மாறணி
6. சிவகங்கை சுப்பிரமணியசாமி கோயில் சுண்ணாம்பூர்.
7. நரிக்குடி அன்ன சத்திரம் நரிக்குடி
ஆதித்தன் ஏந்தல்
முக்குளம்
வீரக்குடி
நாலூர்
நண்டுகாய்ச்சி
கருமாயேந்தல்
அத்திக்குளம்
மாலுர்
ஆலங்குளம்
மேலப்பசலை
தம்மம்
8. சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஐயனார் கோவில் நிலாக்கண்டான் பொழுதுகண்டான்

மற்றும், எரியூர், ஐயனார் கோவில், திருக்கோட்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோவில், மாவூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பாச்சேத்தி சுந்தரவல்லியம்மன் கோயில், திருச்சுழியில் பூமிநாதசுவாமி ஆலயம். வீரக்குடி முருகன் கோயில், மாறை நாடு பெருமாள் கோவில், நரிக்குடி வினாயகர் கோயில்-ஆகியனவும் மருதுபாண்டியரால் திருப்பணி செய்யப்பட்டவை. திருமோகூர் பெருமாள் கோயில் முகப்பு மண்டபமும், திருப்பத்தூர் வயிரவநாதர் திருக்கோயில் ஆயிரக்கால் மண்டபமும், குன்றக்குடி குமரன் மலைக்கோயில் மண்டபமும் அவர்களால் அமைக்கப்பட்டவை. இவை தவிர, “முள்ளால் எழுதியும் சொல்லால் வழங்கியது” மான அவர்களது அறக்கொடைகள் பற்றிய விபரங்கள் கால மாறுதலில் மறைந்து விட்டன. என்றாலும், அவர்களது அறக்கொடைகளினால் இயங்கிவருகின்ற நிறுவனங்கள். அவர்களது ஆழமான இறையுணர்வையும், மக்களது தேவைகளை மதித்துப் பணிபுரிந்த அவர்களது பொறுப்பு மனப்பான்மையையும் காலமெல்லாம் சுட்டி நிற்கும் சிறந்த வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன.

8. மருதுபாண்டியர் வழித்தோன்றல்

சிவகங்கைச் சீமை மண்ணை, தங்களது இரத்தத்தால் நனைத்து சிறப்புமிக்க செம்மண்ணாக மாற்றிய பெருமை மருது பாண்டியர்களையும் அவர்களது தலைமையில் நின்று போராடி, தியாகிகளாகிய பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளையும் சாரும். அவர்கள் அனைவரையும் இனங்காட்டும் ஏடுகள் எதுவும் இல்லை. என்றாலும் கழுமரத்துக் கயிற்றில் தொங்கி, விழுப்புகழ் கொண்ட அந்த “ஏகாதிபத்திய எதிரிகளில்" ஒரு சிலரது விவரங்களை வரலாறு வரைந்துள்ளது. அவர்களது வழித் தோன்றல்களைத் தேடிப்பிடித்து, வாழ்த்துக் கூறிப் பெருமைப் படுத்துவதுடன், அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் நிறைவு செய்ய வேண்டியது இந்தியக் குடியரசின் தலையாய கடமையாகும்.

ஆனால் இருபதாவது நூற்றாண்டில் தேசிய வாழ்வில் தங்களை இணைத்து, இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டு இன்னல்பட்ட விடுதலை வீரர்களும் அவர்களது வழியினரும் மட்டும் தான் இந்திய அரசின் கண்களுக்குப்பட்டது. ஆதலால் அவர்களுக்கு “சுதந்திர சம்மான” மாக உதவித் தொகையை திங்கள் தோறும் வழங்கி வருகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் வேரோடிய ஆங்கில ஏகாதிபத்திய வெறியர்களின் பேராசையை முளையிலே கிள்ளி எறிந்து இந்த மண்ணின் மானத்தை, மாண்பைக் காப்பதற்காகப்போராடி, உயிர்துறந்த உத்தமர்களது வழியினர் அனைவரும் “உதிரப்பட்டி”க்கு அருகதை உள்ளவர்கள் என்பதை இந்திய அரசு இதுவரை உணரவில்லை.

அந்த நிலை, இன்னும் ஏற்படாத காரணத்தினால் தமிழ் நாடு அரசு தமிழ் மாநிலத்தில் வரலாறு படைத்த விடுதலை வீரர்கள், அவர்தம் வழியினரைச் சிறப்பிக்கும் வகையில் 1974ல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மு நாயக்கரது (கி. பி. 1792-99) வழியினருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சிவகங்கைச்சீமை விடுதலைப்போரைத் தொடங்கி கி. பி. 1801ல் மடிந்த வீர மருதுபாண்டியரது வழியினருக்கும் உதவும் வகையில் 1982ல் உதவித் தொகை வழங்கும் உத்திரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி சிவகங்கை, திருப்பத்தூர், இளையான்குடி, பரமக்குடி, மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, மதுரை, மேலுரர். ஆகிய வட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மருதுபாண்டியர் வழியினர் இருநூற்று இரண்டு பேர்கள் திங்கள் தோறும் தமிழ்நாடு அரசினரிடமிருந்து ஒவ்வொருவரும் ரூபாய் நூற்று ஐம்பது மட்டும் பெற்று வருகின்றனர்.

அரசு ஆணை எண் 1143 பொது (அரசியல்) துறை. 19-7-1982 யின் கீழ் உதவித் தொகை பெறும் மருதுபாண்டியர் வழியினர் பட்டியல், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

மருது பாண்டியர் வழித்தோன்றல் பட்டியல்

பெரிய மருது கிளையினர்

1. திரு. வி. பூமிநாதன், சூடியூர் (பரமக்குடி வட்டம்)
2. ” கே. மீனாட்சிசுந்தரம், பாலரங்காபுரம், மதுரை-9
3. ” கே. பாலு, வடக்கு வெளிவீதி, மதுரை-1
4. ” கே. தங்கவேல் சேர்வை, வடக்குவெளிவீதி, மதுரை-1
5. ” எஸ். செல்லச்சாமி என்ற பிச்சை, கீழமாசிவீதி, மதுரை

6. திரு. கே. மலைச்சாமி, சேதுபதிதெரு, சிவகங்கை
7.வி. சின்னச்சாமி, சூடியூர், (பரமக்குடி வட்டம்)
8.எஸ். பாலகிருஷ்ணன், சூடியூர்,
9.எஸ். கோபாலகிருஷ்ணன், சூடியூர்,
10.எஸ். ஜெயராமன், சூடியூர்,
11.எஸ். ஜெயவேலு, சூடியூர்,
12. திருமதி. சாத்தாயி, முக்குளம் (திருச்சுழியல் வட்டம்)
13. திரு. எம். சுப்ரமணியம், சூடியூர், (பரமக்குடி வட்டம்)
14.எம். வெள்ளைச்சாமி, சூடியூர் ௸ வட்டம்
15.எம். மகாலிங்கம், சூடியூர்
16.எம். சப்தகிரி, சூடியூர்
17.எம். நாகராஜன், சூடியூர்
18.எம். துரைப்பாண்டின், பம்மல் (செங்கல்பட்டு)
19.எம். சண்முகவேல் பாண்டியன், பம்மல்௸ வட்டம்
20.எம். பெரிய மருது பாண்டியன், பம்மல்
21.டி. சின்னமருது பாண்டியன், சூடியூர் பரமக்குடி
22.டி. சதுரகிரிநாதன், சூடியூர்,
23.கே. பாஸ்கரன், வடக்குமாசிவீதி, மதுரை-1
24. திருமதி. வேலுநாச்சியார், வடக்குமாசிவீதி, மதுரை-1
25. திரு. எஸ். சதுரகிரிநாதன், சூடியூர், பரமக்குடி வட்டம்
26.சி. இராமச்சந்திரன், சூடியூர், பரமக்குடி வட்டம்
27.சி. வெள்ளைமருது, சூடியூர், டிை வட்டம்
28.இராமகிருஷ்ணன்,
29.எம். மதிவாணன்,
30.எம். தமிழரசன்,
31.”எம். ராஜன் சேதுபதி,
32.கே. இராமச்சந்திரன்,வேப்பங்குடி சிவகங்கைவட்டம்
33.”எம். மாப்பிள்ளைசாமி,
34.”ஆர். மலைச்சாமி, சின்னக்கண்ணனூர் அருப்புக்கோட்டை வட்டம்

35. திரு. ஆர். ஆறுமுகம், சின்னக்கண்ணனூர்,
அருப்புக்கோட்டை வட்டம்
36. ” விஜயன், வேப்பங்குடி
சிவகங்கை வட்டம்
37. திருமதி. லட்சுமி அம்மாள், என். நெடுங்குளம்
சிவகங்கை வட்டம்
38. திரு. எம். கருப்பையா, மானாமதுரை, மானாமதுரை வட்டம்
39. ” எம். வேலு,
40. “ ஏ. துரை
41. “ ஏ. கோபால்,
42. ” எஸ். பாண்டி
43. “ எஸ். மருது சேர்வை,
44. “ எஸ். சுப்பையா சேர்வை
45. “ எஸ். ஆறுமுகம்,
46. “ சலுகை சேர்வை,
47. “ பி. மருதுசேர்வை, கீழகொம்புக்காரன் ஏந்தல்
      மானாமதுரை வட்டம்
48. “ பி. முத்துவிஜயன்,
49. “ கே. சலுகை, பூக்குழி, இளையான்குடி வட்டம்
50. “ கே. இராமு, செம்பனூர், சிவகங்கை வட்டம்
51. “ எம். ஆனந்தம், வீரமாபாண்டியபுரம், பரமக்குடி வட்டம்
52. “ எம், இராக்கு ரயில்வேகுடியிருப்பு, காரைக்குடி
53. “ அங்குச்சாமி சேர்வை, இருஞ்சிறை, திருச்சுழியல் வட்டம்
54. “ உ. ராக்கு, திருச்சுழியல் வட்டம்
55. “ ஒ. சண்முகம், கீழ கொம்புக்காரன்ஏந்தல்,
      மானாமதுரை வட்டம்
56. திருமதி. கி. முத்தாத்தாள், 
57. திரு. டி. இராமகிருஷ்ணன், 
58. “ டி. ஜெயபாண்டி, பட்டமங்கலம்,
         திருப்பத்தூர் வட்டம்



226

59. திருமதி. கே. விஜயலட்சுமி, பட்டமங்கலம். திருப்பத்தூர் வட்டம் 60. திரு. டி. விஜயபாண்டியன், கீழக்கொம்புக்காரன்ஏந்தல்,

மானாமதுரை வட்டம்

61. என். பிச்சை, மானாமதுரை,

62. சோமநாதன், ஒசூர் பட்டணம்

63. ராமச்சந்திரன், கல்லூரணி, அருப்புக்கோட்டை

வட்டம்

64. சுப்ரமணியன், சிவகங்கை, சிவகங்கை வட்டம்

65. பி. மாப்பிள்ளைசாமி, கீழகொம்புக்காரனேந்தல்,

மானாமதுரை வட்டம்

66. பி. துரைச்சாமி, சூடியூர், பரமக்குடி வட்டம்

67. திருமதி. பி. லட்சுமி, வடக்குசந்தவூர், இளையான்குடி

வட்டம்

68. பி. ஜானகி, கீழகொம்புக்காரன்ஏந்தல்,

மானாமதுரை வட்டம்

69. உ. ராக்காத்தாள், 70. திரு. ராஜமாணிக்கம், சிவந்திரனேந்தல்,

சிவகங்கை வட்டம்

71. சி. சின்னச்சாமி, கீழகொம்புக்காரன்ஏந்தல்,

மானாமதுரை வட்டம் 72. திருமதி. கே. ராணி, செம்பனூர், சிவகங்கை வட்டம்

73. கே. முத்துலட்சுமி,

74. கே. சீதாலெட்சுமி,

75. கே. தான்யலட்சுமி,

76. அனந்தாயி, நரிக்குடி, திருச்சுழியல் வட்டம் 77. திரு. வி. கருணாகரன், செம்பனூர் சிவகங்கை வட்டம் 78. அனந்தநாராயணன்,

79. அரிகரநாராயணன், ТТ 80. திருமதி. பூமாதேவி,

81. கோசலை, பூக்குழி, இளையான்குடி வட்டம்

82. திரு. டி. விஜய பாண்டியன், சீனிக்காரன் ஏந்தல்,

திருச்சுழியல் வட்டம்
187. திரு. கே. முருகேசன் ஒத்தக்கடை. மேலூர் வட்டம்

188. திரு. கே. கேசவன், வீரபாஞ்சான், மதுரை வட்டம்
189. திரு. பி. சின்னச்சாமி, மலேசியா
190. திரு. பி. நாகசாமி, மலேசியா
191. திரு. பி, ஆறுமுகம், தம்பிப்பட்டி, திருப்பத்தூர் வட்டம்
192. திருமதி. எஸ். பொன்னுநாச்சியார், சீனியமங்கலம், திருவாடானை வட்டம்
193. திரு. எஸ். சிவசாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
194. திரு. எஸ். இராமச்சந்திரன், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
195. திரு. எஸ். கந்தசாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
196. திருமதி. எஸ். ராணிநாச்சியார், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
197. திருமதி. வி. காந்திநாச்சியார், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
198. திரு. எஸ், சீனிச்சாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
199. திருமதி. எஸ். பவானி நாச்சியார், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
200. திரு. எஸ். பதிராஜா, திருப்பத்தூர். திருப்பத்தூர் வட்டம்
201. திரு. பி, சிங்காரம், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
202. திரு. என். தங்கச்சாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்

  1. Madurai District Records vol. 4669 (11.5, 1821) pp. 95-96
  2. Madurai District Records vol. 1 152 - (7-3-1807)
  3. Ibid (12-5-1821) pp. 101-102
  4. Ibid 1133 - (9-3-1807). р. 33.
  5. Ibid. 4669 - (12-5-1821) p. 99.
  6. Madurai District Records vol. 4681 (30-1-1883) pp. 32-33
  7. Madurai District Records vol. 1178 - (27-3-1802) pp. 204-205
  8. Military Consultations vol. 299 – (29-6-1802) - p. 4465
  9. Madurai District Records vol. 1139 - (14–4–1802)
  10. Ibid vol. 1140 - (7-6-1802) pp. 20-22
  11. Military Consultations vol. 299 - (29-6-1802) – pp. 4425, 80
  12. Madurai District Records vol. 1140 (7-6-1802)pp. 20-22 Military Consultations vol, 299 (14-6-1802) pp. 4425-26
  13. Ibid vol. 299 (11-6-1802) pp. 4420-29
  14. Military Consultations vol. 299 (5-7-1802) p. 4457
  15. Political Consultations vol. I (A) (10-6-1800) pp. 1-10.
  16. Ibid (21-9-1800.) pp. 562-63
  17. Political Consultations vol. I.A. (10-6-1800)- pp. 17-20, 23
  18. Ibid vol. 2 A (21-9-1800) - pp. 560-62
  19. Ibid vol. I.B. - (18-7-1800) - pp. 388-89
  20. Ibid (25-8-1800) - pp. 487-88
  21. Political Consultations vol. I (B) (2-8-1800) pp. 38
  22. Ibid I B (10-9-1800) p. 500
    Ibid II (B) (26-10-1800) p. 901
  23. Revenue Sundries uol. 26 (17-10-1801) p. 753-54
  24. Revenue Sundries vol. 26 (21-10-1801) p. 465
  25. Revenue Sundries vol 26 (1-12-1802) p. 1011