முதற்பராந்தக சோழனின் உத்தரமேரூர்க் கல்வெட்டு - 01

விக்கிமூலம் இலிருந்து

உத்தரமேரூர்க் கல்வெட்டு- 01[தொகு]

1. ஸ்வஸ்தி ஸ்ரீ
மதுரை கொண்ட கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பனிரண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீமுகப்படி ஆணை
2. இதனால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்
3. த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன் மனையிலே அ
4. கம் எடுத்துக் கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல் பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப் பட்டி
5. ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையாராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய்தொழிந்தபெரு மக்களுக்கு
6. அணைய பந்துக்கள் அல்லாதாராய் குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறு யாதான் ஒரு
7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வரும் சம்வத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோ
8. லை வாங்கி பன்னிருவரும் தோட்டவாரியம் ஆவ தாகவும் நின்ற அறுகுடவோலையும் ஏரிவாரியம் ஆ
9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வியவஸ்தை ஓலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு
10. ம் குடவோலையில் பேர்எழுதி இடப்படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன்வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவாரியம் ஆவதாகவும் அறுவர் பொன் வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத
11. வாரியங்கள் ஒருகால் செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாதாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் ச்ந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரிவர்மர் ஸ்ரீமுகம் அருளிச் செய்து வரக்காட்ட
12. ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளான் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கெட்டு சிஷ்டர் வர்த்தித்திடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.
ஆதாரம்
தி.வை.சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3.


மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]