முல்லைக்கலி 115 முதல் 117 முடிய
115 தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக் கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம் புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ. அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்; நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என் சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த பூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப், பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது? அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும் அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண் வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம் அல்கலும் சூழ்ந்த வினை!
116 பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம் தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ என்னையே முற்றாய் விடு. விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில் நீங்கிச் சினவுவாய் மற்று. நீ நீங்கு, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு; யாய் வருக ஒன்றோ, பிறர் வருக; மற்று நின் கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான், நீ அருளி நல்க பெறின். நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம் மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! - கலத்தொடு யாம் செல்வுழி நாடிப், புலத்தும் வருவையால் - நாண் இலி! நீ.
117 மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ, பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, எதிரிய தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின் கையது எவன்? மற்று உரை. 'கையதை - சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இ·து ஓர் மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்' - 'புட்டில் உள் என் உள? காண்தக்காய்! என் காட்டிக் காண்.' காண், இனி; தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு காட்டுச் சார் கொய்த சிறு முல்லை, மற்று இவை. முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்! எல்லிற்றுப் போழ்து ஆயின் - ஈதோளிக் கண்டேனால்; 'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு மெல்லியது, ஓராது அ