மூன்றாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

மூன்றாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

மெய்க்கீர்த்தி 01[தொகு]

  1. புயல்பெருக வளம்பெருக பொய்யாத நான்மறையின்
  2. செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ
  3. வெண்மதிபோற் குடைவிளங்க வேல்வேந்த ரடிவணங்க
  4. மண்மடந்தை மனமகிழ மனுவின்நெறி தழைத்தோங்க
  5. சக்கிரமுஞ் செங்கோலுந் திக்கனைத் துஞ்செல்லக்
  6. கற்பகாலம் புலிகாப்பப் பொற்பமைந்த முடிசூடி
  7. விக்ரம பாண்டியன் வேண்டவிட்ட தண்டால்
  8. வீரபாண் டியன்மகன் படஏழகம் படமறப்
  9. படைபடச் சிங்களப் படைமூக் கறுப்புண்டு
  10. அலைகடல்புக வீரபாண்டி யனைமுதுகிடும் படிதாக்கி
  11. மதுரையும் அரசுங்கொண்டு ஜயஸ்தம்ப நட்டு
  12. அம்மதுரையு மரசும்நாடு மடைந்தபாண் டியற்களித்தருளி
  13. மெய்ம்மலர்ந்த வீரக்கொடியுடன் தியாகக்கொடி எடுத்துச்
  14. செம்பொன் வீர சிங்கா தனத்துப்
  15. புவனமுழு துடையா ளொடும்வீற் றிருந்தருளிய
  16. கோப்பர கேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
  17. ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு...

மெய்க்கீர்த்தி 02[தொகு]

  1. புயல்வாய்த்து மண்வளரப் புலியாணையும் சக்கரமும்
  2. செயல்வாய்த்த மனுநூலும் செங்கோலுந் திசைநடப்பக்
  3. கொற்றவையும் திருவும் வாழக்
  4. கொடுங்கலிகெடக் குளிர்வெண்குடைக்
  5. கற்பகாலம் படிகவிப்பக் கதிரவன்குல முடிசூடி
  6. எத்தரையுந் தொழுமிறைவற் கெதிரம்பலஞ் செம்பொன்வேய்ந்து
  7. சித்திரைவிழா அமைத்திறைவி திருக்கோபுரஞ் செம்பொன்வேய்ந்து
  8. அரிபிரமர் தொழுமிறைவற் ககிலமெல்லாந் தொழுதுபோற்றத்
  9. திரிபுவன வீரீச்சுரஞ் செய்துதிரு வைகாசியுஞ்
  10. சிறந்ததிரு வாவணியுந் திசைவிளகு... யூர்
  11. நிறைந்தசெல்வத் துடன்விளங்க நிலவுந்திரு நாள்கண்டு
  12. மன்னுயிர்க் கருளளிக்கும் வானவர்நா யகர்வாழ
  13. அருளமைந்த திருமலைபோல் கோயில் கண்டு
  14. தாரணிகொள் திருத்தாதைக்கும் இராசராசீச் சுரத்தார்க்கும்
  15. காரணச் சிறந்தகோயில் அணிதிகழ்பொன் வேய்ந்தருளித்
  16. தனியாணை விட்டாண்மை செய்து வடமன்னரைத் தறைப்படுத்தி
  17. முனிவாறிக் கச்சிபுக்கு முழுதரசையுந் திறைகவர்ந்து
  18. தாங்கரும்போர் வடுகைவென்று வேங்கைமண்டலந் தனதாக்கி
  19. பொன்மழைபெய் துறைந்தையென்னும் பொன்னகர் புக்கருளித்
  20. தண்டொன்றால் வழுதிமைந்தனை மூக்கரிந்து தமிழ்மதுரை
  21. கொண்டுவிக்கிரம பாண்டியற்குக் கொடுத்துமீண்டதற் பின்பரிபவத்தா
  22. லெடுத்துவந்து நெட்டூரில் எதிர்த்தவீர பாண்டியன்
  23. முடித்தலைகொண் டமர்முடித்தவன் மடக்கொடியை வேளமேற்றித்
  24. திருவிழந்த தென்னவனுஞ் சேரலனும் வந்திறைஞ்சி
  25. அரியணையின் கீழிருப்ப அவன்முடிமே லடிவைத்துப்
  26. படிவழங்கி முடிவழங்கிப் பாண்டியர்க்கு விடைகொடுத்துக்
  27. கொடிவழங்கும் வில்லவர்க்குக் கொற்றவர்பெறாத் திருவழங்கி
  28. வீரகேரளன் வெங்கண்டு விறல்தரித்து வந்திறைஞ்சப்
  29. பாரறிய வாழ்வருளிப் பரிகலத்தி லமுதளித்துப்
  30. பருதிகுல பதியேன்று திருநாமந்தரித்த பாண்டியற்கு
  31. இருநெதியும் பரிசட்டமும் இலங்குமணிக் கலனுநல்கி
  32. ஈழமண்டல மெறிந்தருளி ஆழிமண்டலத் தரசிறைஞ்சப்
  33. பூழியர்கெடக் கொங்கும் பாழ்படப் பொருதுபுக்குக்
  34. கருவூரிற் சோழகேர ளனென்று மன்னர்தொழ
  35. விசையமா முடிசூடி வீரமுடி புனைவதற்கு
  36. விட்டெழுந்து பன்னதான் வந்துடன் போர்மலையப்?
  37. படைவிட்ட .... மாயப் படையெல்லாம் படப்பொருது
  38. கட்டாண்க ளட்டுக்கொடி மலைக்குவடு இடித்து
  39. மட்டியுரும் கழிக்கோட்டையும் வளைந்தறுத்துக் களமாடி
  40. நெட்டலகைக் குலமாட நெடுங்களிற்றா லமர்ந்... குடியில்
  41. கடியரணப் போர்ப்படையைப் பொடியாக்கி அடியுண்ட
  42. படைத்தகை விறைவிருதா வளையுண்டு பிடியுண்டு
  43. புலமாட நெடுங்களிற்றாற் கட்டுண்டு பேதைகள்உடங் கேபோக
  44. எண்ணில்கோடிப் படைவீரர் புண்ணீரில் புக்கழிந்
  45. தாக்கியபோர் வலிவிருதர் மூக்கிழந்து முகமழிய
  46. மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு விழத்தடிந்து
  47. தந்தைமறஞ் சாய்ந்துடையத் துரந்துசெநகா? அழிஞ்சநறுந்
  48. தென்மதுரைப் புறமதிளைத் தன்னெடும்படைக் கடல்வளையப்
  49. பெருவழுதியரும் தம்பியரும் பெற்றதாயாரும் பேருரிமையும்
  50. பொருவருதுயர் துணையாக வேறுவேறு சுரம்படரத்
  51. தென்மதுரைப்பதிபுக்கு வந்ததையெல்லாங் கொடுத்துப்
  52. பொடிபடுத்தி வழுதியர் தம்கூட மண்டபம்
  53. கழுதையேரிட உழுதுபுகழ்க் கதிர்வளியைக் கவடிவித்தி
  54. ...பேவ பதங்கண்டுகேட்டு
  55. மதகளி றோரெட்டு மேழுலகு மிடர்தீரச்
  56. சோழபாண் டியனென்று போ(ர்)வீரர்...கள் களிப்ப
  57. வீரமா முடிபுனைந்து திரிபுவன வீரரென்(று)
  58. இருநிலஞ்சொல முடிசூடி
  59. இகல்கழல் கட்டிப் புகழ்வீரக் கொடியெடுத்துத்
  60. தியாகக்கொடி திசையெட்டிலு மேகக்கலிப் பகைதுரக்க
  61. மாமதுரையை வலங்கொண்டு திருவால வாயுறையும்
  62. தேமலர்க் கொன்றைவார்சடைச் செழுஞ்சுடரைத் தொழுதிறைஞ்சி
  63. ஆங்கவர்க்குப் பூணாரம் அநேகவிதம் கொடுத்தருளி
  64. ஓங்கிய பேர்ஒலி கழலிறைஞ்ச இந்தி...நது.
  65. பொற்படியும் இளங்களிற்றின் கற்படியும் கொடுத்தருளி
  66. வண்டறைதார் வழுதியரைக் கொண்டபாண்டி மண்டலத்தைச்
  67. சோழபாண்டியன் மண்டலமென் றேழுபாருஞ் சொலநிறுத்தி
  68. மல்லல்வையை மதுரையையும் மதுரையென்ற பேரொழித்துத்
  69. தொல்லை முடித்தலைகொண்ட சோழபுர மென்றருளித்
  70. தார்வழுதி மண்டபத்தில் சேரபாண்டியர் தம்பிரானென்று
  71. பேரெழுதிப் பாண்டியனைப் பாண்டியனென்னும் பேர்மாறிவர
  72. நெடும்படைத் தென்னவன்கெட மதுரைகொண்ட தோள்வலிபாடிய
  73. பாணனைப் பாண்டியனென்று பருமணிப் பட்டஞ்சூட்டி
  74. வெஞ்சிலை வாங்கி வேட்டைநீர் படிந்தாடி
  75. ஓடைமதக் களிறேறி யாடல்வாம் பரிநடவித்
  76. தண்டளவ மலர்மாலையில் வண்டரற்றச் செண்டாடி
  77. அரன்திரு வாலவாயில் அமைந்தவர்க்குத் தன்பேரால்
  78. சிறந்தபெருந் திருவீதியும் திருநாளுங் கண்டருளிப்
  79. பொருப்புநெடுஞ் சிலையான்முப் புரமெரித்த சொக்கற்குத்
  80. திருப்பவனி கண்டருளித் திருவீதியிற் சேவித்துத்
  81. தென்மதுரைத் திருவாலவாய் பொன்மலையெனப் பொன்வேய்ந்து
  82. சிறைகொண்ட புனல்வையைச் சேரபாண்டியன் மண்டலத்து
  83. இறைகொண்ட பசும்பொன்னும் இறையிலியு மெயிற்புலியூர்
  84. ஆடுமம்பல வாணர்கூடி வாய்ந்ததிரு நடங்கண்டருளும்
  85. பாடகக்காற் பைங்கிளிக்கும் பைம்பொன்மதிள் திருவாரூர்
  86. வாவற்குந் திரிபுவன வீரீச்சுர வருந்தவற்கும்
  87. தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங் கொடுத்தருளி
  88. மந்திரமறை முழுதுணர்ந்த அந்தணர்க் கறமேற்றி
  89. எழுதுவென்றிச் செயத்தம்பம் எத்திசையிலும் நடுவித்து
  90. வழுவில்செஞ் சொற்கவி குன்றுபீடங்களாக மதுரை -யடங்கவும் பொறிப்பித்தவன்
  91. அடிநீழற்கீ ழபயமினி யஞ்சலென
  92. ...வழுதிக்கும் பதிதடையும் சாமரையும் - கோசாலையும் வெம்பரியும்
  93. கொடித்தேருங் குஞ்சரமும் வைகை நாடும்
  94. பழம்ப... இவற்... தியன்
  95. திக்கெட்டும் எல்லைதொட...
  96. ...மசதகர் வெற்பின் புகழுலாவச்
  97. செம்பொன்வீர சிங்கா தனத்து வீற்றிருந்தருளிய
  98. கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
  99. ஸ்ரீமதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலை
  100. யுங்கொண்டு வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணி
  101. யருளிய திரிபுவன வீரசோழ தேவற்கு யாண்டு....


மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]