உள்ளடக்கத்துக்குச் செல்

மௌனப் பிள்ளையார்/015-015

விக்கிமூலம் இலிருந்து

"வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழியாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவு தான் வெளியே தெரியும் என்பது கிடையாது, சின்னப் பலகணியின் வழியே வெகுதூரம் பார்க்கலாம்.

அதுபோலவே 'சாவி' இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்த போதிலும் பலகணி வழியாகப் பார்ப்பதுபோலப் பார்த்து மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்டமிட்டு எழுதியிருக்கிறார். வெகு ரசமாகவும் எழுதி யிருக்கிறார்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச் சுவை கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகள் அல்ல; சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மிகக் கட்டுரைகள் ; இலக்கியம் என்று சொல்வதற்குரிய ரசமான கட்டுரைகள்."

ரா. கிருஷ்ணமூர்த்தி,

'கல்கி'

"https://ta.wikisource.org/w/index.php?title=மௌனப்_பிள்ளையார்/015-015&oldid=1681425" இலிருந்து மீள்விக்கப்பட்டது