விக்கிமூலம்:கணியம் திட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் நேரடியாகப் பங்களிக்க முன்வந்துள்ளது.

இத்திட்டத்திற்கான தேவை[தொகு]

சனவரி 2016 முதல் விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் நடைப்பெற்று வருகிறது. இத்திட்டதின் மூலம் இதுவரை 2090 நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்நூல்களின் மூலம் 403345 பக்கங்கள் மெய்ப்பு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 திசம்பர் 2018 வரை கிட்டத்தட்ட 9027 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் 9665 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 நூல்கள் விக்கிமூலத்தில் கட்டற்ற முறையில் அனைவரும் படிக்க பதிப்பிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது திட்டம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தன்னார்வளர்களின் சிறப்பான பங்களிப்பு மூலம் நாம் செய்ய முடிந்தது வெறும் 68 நூல்களே. இதே வேகத்தில் நாம் மெய்ப்பு பணிகளை செய்து வந்தால் 2090 புத்தகங்களை மெய்ப்பு செய்ய முப்பது வருடங்களாகும். 2090 நூல்கள் என்பது முதல் முயற்சிதான். மேலும் பல ஆயிரம் புத்தகங்கள் மெய்ப்பு செய்ய அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளன. அதனால் தன்னார்வளர்களுடன் சேர்ந்து விரைவாக மெய்ப்பு செய்ய கணியம் அறக்கட்டளை முன்வந்துள்ளது. இத்திட்டதின் மூலம் கணியம் அறக்கட்டளை மெய்ப்பு/சரிபார்பபு பணியில் ஈடுபடுவர்களுக்கு கட்டணம் வழங்க உள்ளது.

கணியம் அறக்கட்டளையின் தெரிவிப்பு[தொகு]

இக்கட்டளையின் செயல்பாடுக்கும் விக்கிமூலம், விக்கிப்பீடியா முதலிய தளங்களை செயல்படுத்திவரும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கணியம் அறக்கட்டளை இப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை எப்பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து பெறாது.

திட்டம் செயற்படும் விவரம்[தொகு]

மெய்ப்பும் சரிபார்ப்பும் இரண்டு வெவ்வேறு நபர்களால் செய்யப்படும். மேலும் மெய்ப்புத் தரத்தை உறுதி செய்ய தன்னார்வலர் ஒரு பார்த்து transclusion செய்து நூல் பதிப்பு செய்யப்பட்ட பின்பு தான் கட்டணம் விநியோகிக்கப்படும். இதன் மூலம் தரம் உறுதி செய்யப்படும்.

நெறிமுறைகள்[தொகு]

 • கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிப்போர் kaniyam என்று முடியுமாறு பயனர் பெயர் ஒன்றை உருவாக்கி கொள்ளவேண்டும். தாங்கள் கணியம் அறக்கட்டளை மூலம் கட்டணம் பெறுவதற்கு உரிய தொகுப்புகளை இக்கணக்கில் செய்யுங்கள். தங்கள் தன்னார்வமான தொகுப்புகளை தங்கள் வேறு தன்னார்வ கணக்கில் தொகுப்புகளைச் செய்யலாம்.
 • கணியம் திட்டத்தில் பங்களிப்போர் விக்கிமீடியா அறக்கட்டளை கட்டணத் தொகுப்புகள் பற்றி வகுத்திருக்கும் கொள்கைக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். அதாவது, தாங்கள் கணியம் திட்டத்தில் இணைந்து செயற்படுகிறோம் என்பதையும் இதற்காகக் ஊக்கத் தொகை பெறுகிறோம் என்பதையும் தங்கள் பயனர் பக்கத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனை தெரிவிக்க கீழ்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தலாம்.
{{கட்டணத் தொகுப்பு|அமர்த்துநர்=[http://www.kaniyam.com/foundation/ கணியம் அறக்கட்டளை]|userbox=yes}} 

இந்த வார்ப்புருவை அனைவரும் தங்களது பயனர் பக்கத்தில் பதிவிட வேண்டும்.

 • தங்களுக்கு வேறு தன்னார்வ கணக்கு இருந்தால் அதன் விவரங்களையும் இப்பேச்சு பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இதனை தெரிவிக்க கீழ்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தலாம்
{{பயனர் மாற்று கணக்கு|தங்களின் தன்னார்வ பயனர் பெயர்}}
 • தாங்கள் செய்துள்ள தொக்குப்புகளின் விவரங்களையும் தங்களது பேச்சு பக்கத்தில் தெரியபடுத்த வேண்டும்.
 • கணியம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து இந்தப் பக்கத்தில் இற்றைப்படுத்தி வர வேண்டும்.
 • நிர்வாகிகள் தேர்தல், விக்கிமூலம்/விக்கிஊடக அறக்கட்டளை தொடர்பான பயண உதவித் தொகை வாய்ப்புகள் போன்ற சூழ்நிலைகளில், ஒருவர் தன்னார்வமாகப் பங்களிக்கும் கணக்கின் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இந்தப் புரிதல், விக்கிமூலம் திட்டம் தொடர்ந்து தன்னார்வமான தலைமைத்துவத்துடன் இயங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முன்மொழியப்படுகிறது.
 • தற்போதைய நிலையில், இது முழு நேர சம்பளப் பணி கிடையாது. ஒவ்வொரு நூலும் வெளியிடப்படும் அடிப்படையில் பகுதி நேர வாய்ப்பு மட்டுமே. எந்தப் பயனர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பது கணியம் அறக்கட்டளையின் முடிவே. இத்தகைய முடிவுகளிலோ கணியம் அறக்கட்டளை ஊக்கத் தொகை அளிப்பது குறித்த பிணக்குகள், தொடர்பாடல்களிலோ விக்கிமூலம் திட்டம் பொறுப்பு ஏற்காது.

மேலும் இதில் உள்ள நெறிமுறைகளை நீக்கவோ புதிய நெறிமுறைகளை சேர்க்கவோ கணியம் அறக்கட்டளை செய்யலாம். அவ்வபோது எந்த நெறிமுறைகள் உள்ளனவோ அதனை இத்திட்டத்தில் பங்களிப்பவர்கள் கடைபிடித்து வர வேண்டும்.

மெய்ப்பு வழிகாட்டுதல்கள்[தொகு]

 • மெய்ப்பு செய்பவர் இங்குள்ள ஒரு நூலை தேர்ந்தெடுத்து பின்னர் மெய்ப்பு தொடங்குமுன் அதன் விவரங்களை இங்கு பதிவிட வேண்டும். கணியம் அறக்கட்டளை சில முன்னுரிமைகளை கருதி சில நூல்களை முதலில் மெய்ப்பு செய்யவும் பரிந்துரைக்கலாம்.
 • மெய்ப்பு செய்பவர் அந்நூலின் மேலடி, கீழடி, எழுத்துப்பிழைகள், வடிவமைப்பு மாறுதல்கள் (font size, bold, italic, alignment, quotation mark, etc) முதலியவைகள் செய்ய வேண்டும். சரிபார்ப்பவர் செய்து கொள்வார்கள் என்று கருதாமல் அனைத்து பணிகளையும் செய்த பிறகே பிங்க் வண்ணத்தில் இருந்து மஞ்சல் வண்ணத்தில் மாற்ற வேண்டும்.

சரிபார்ப்பு வழிகாட்டுதல்கள்[தொகு]

 • மெய்ப்பு செய்த நூல்களை சரிபார்ப்பவர் கணியம் அறக்கட்டளையின் வழிக்காட்டுதலோடு நூலை தேர்ந்தெடுத்து இங்கு பதிவிடவேண்டும்.
 • மெய்ப்பு செய்த பக்கங்களில் சிற்சில தவறுகள் இருந்தால் அதனை சரி செய்துவிட்டு மஞ்சல் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்ற வேண்டும்.
 • மெய்ப்பு செய்யப்பட்டதாக குறிக்கப்பட்டபட்ட பக்கங்களில் தவறுகள் மிகவும் அதகமாக இருந்தால் அதனை சுட்டிக் காட்டி மீண்டும் மெய்ப்பு செய்ய அதனை மெய்ப்பு செய்தவரிடம் தெரிவித்து விடலாம். அவர் மெய்ப்பு செய்த பிறகு மீண்டும் சரிபார்ப்பு செய்யலாம்.
 • மெய்ப்பு செய்வதில் இரண்டு நிலைகள் உள்ளன. மெய்ப்பு பார்க்கப்பட்டவை என்பதை ஒரு பயனர் குறிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்டவை என்பதை மற்றொரு பயனர் குறிக்கவேண்டும். கணியம் கணக்கு மற்றும் தன்னார்வ கணக்கு என இரண்டு கணக்கு உடையோர் ஒரே பக்கதில் ஒரு கணக்கில் மெய்ப்பும் மற்றொரு கணக்கில் சரிபார்ப்பும் செய்யக்கூடாது.

கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிக்கும் பயனர்கள்[தொகு]

 1. Abirami kaniyam
 2. Divya kaniyam
 3. Booklover kaniyam
 4. Roopa - kaniyam
 5. Shobia kaniyam
 6. arun kaniyam
 7. Athithya kaniyam
 8. தகவலுழவன்

கணியம் திட்டம் பங்களித்த நூல்கள்[தொகு]

விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள். இப்பக்கத்தில் கணியம் திட்டம் மூலமாக முடிந்த/நடந்துவரும் பணிகளைப் பார்க்கலாம்.

தொடர்பு விவரம்[தொகு]

கணியம் திட்டம் பற்றிய கேள்விகள், ஐயங்களுக்கு கணியம் அறக்கட்டளையை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

kaniyamfoundation@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது, சீனிவாசனைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் வழிகாட்டுதலுக்கு டெலகிராம் செயலியிலும் இணைந்து உரையாடலாம்.