உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-08-18

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"எனது நண்பர்கள்" கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் எழுதியது.

முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், தம்முடைய சில நண்பர்களை இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்கள்.

முன்னுரை

இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள்.

இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது. அவர்கள் என்னுடன் பழகிய—தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளிற் சிலவே இதில், இடம் பெற்றுள்ளன.

என் வரலாறு ஒன்றை நானே எழுதி வெளியிட வேண்டுமெனச் சிலர் விரும்பினர். நான் விரும்பவில்லை. காரணம் மேலைநாடுகளில் ஒருவருடைய வரலாறு ஒரு நாட்டின் வரலாற்று நூலாகவும், தமிழகத்தில் அது தற்புகழ்ச்சி நூலாகவும் கருதப்படுவதினாலேயாம். என்றாலும், அவர்களுக்கும் இந்நூல் சிறிது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.

நாவலர் ந.மு.வே. நாட்டாரய்யா, பெரியார் ஈ. வே. ரா., மதுரை சர். பி.டி. இராஜன் ஆகிய

(மேலும் படிக்க...)