விக்கிமூலம்:பக்கங்களைப் பூட்டுதல்
இந்தப் பக்கம் நிர்வாகிகள் பக்கங்களைப் பூட்டும் சந்தர்ப்பங்களை விளக்குகிறது.
பக்கங்களைப் பூட்டும் சந்தர்ப்பங்கள்
[தொகு]முழுமையாக மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்கள்
[தொகு]மூலப் பிரதியுடன் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களால் ஒப்புநோக்கப்பட்டு முழுமையடைந்த பக்கங்கள் பூட்டப்படலாம். அவற்றில் மேலதிக மாற்றங்கள் தேவையெனப் பின்னர் உணரப்பட்டால் பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடி மாற்றுதல் வேண்டும்.
தொடர்ச்சியான விசம மாற்றங்களுக்கு உள்ளாகும் பக்கங்கள்
[தொகு]சில பக்கங்கள் விசமிகளின் தொடர்ச்சியான தாக்குதலுள்ளு உள்ளானால் அவை பூட்டப்படலாம்.
பயனர்களிடையே கருத்துவேறுபாடு காரணமாக மீண்டும் மீண்டும் மாற்றங்களுக்குள்ளாகும் பக்கங்கள்
[தொகு]இத்தகைய சந்தர்ப்பத்தில் பக்கம் பூட்டப்பட்டுப் பேச்சுப் பக்கத்தில் இணக்கம் எய்தப்பட்ட பின்னர் பக்கம் மீண்டும் திறக்கப்படல் வேண்டும்.
பதிப்புரிமையுள்ள பக்கங்கள்
[தொகு]பதிப்புரிமையுடைய படைப்புக்களைப் பயனர்கள் அவற்றின் பதிப்புரிமை தொடபுடைய தெளிவின்மை காரணமாக மீண்டும் மீண்டும் இணைத்தால் அவை நீக்கப்பட்ட பக்கம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுப் பூட்டப்படல் வேண்டும்.
சிறப்புச் சந்தர்ப்பங்கள்
[தொகு]- முதற்பக்கம்
- பழைய உரையாடற் பக்கங்கள்
- மீடியாவிக்கிப் பெயர்வெளியில் உள்ள எல்லாப் பக்கங்களும்
பூட்டக் கூடாத பக்கங்கள்
[தொகு]- பேச்சுப் பக்கங்கள்
- விக்கிசோர்ஸ் பெயர்வெளியிலுள்ள பக்கங்கள்
பூட்டுவதற்கான ஒழுங்குமுறைகள்
[தொகு]முழுமையடைந்த பக்கங்களைப் பூட்டுவதற்கு ஓர் ஒழுங்குமுறை பின்பற்றப்படல் வேண்டும்.