விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை, சேலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலம் பயிற்சி பட்டறை, சேலம்
https://meta.wikimedia.org/wiki/Tamil_Wikisource_Workshop,_Salem

நாட்கள்: 08.06.2019, 09.06.2019

இடம்: சி.யே. பல்லாசியோ, சேலம்

ஏற்பாடு: சி.ஐ.எசு, பெங்களுரு

முதல் நாள்: 08.06.2019

அமர்வு 1:-

விக்கி மூலம் பயிற்சியை அளிப்பதற்காக சேலத்திற்கு வருகை தந்திருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த நீண்ட நாள் வங்காள விக்கிமூல பங்களிப்பாளரான செயந்த நாத் சிறப்புப் பயிற்சியாளர் அவர்களுக்கும் சிஐஎசு. பெங்களுரிலிருந்து வருகை தந்திருந்த ஒருங்கிணைப்பாளர் சிஐஎசு புவனா அவர்களுக்கும், தமிழ் விக்கிப்பீடியா சமூகத்திற்கு எதிர்கால நம்பிக்கையாய் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிருந்த பெண்கள் மற்றும் பழைய, புதிய விக்கிப்பீடியர்கள் அனைவரையும் தமிழ் விக்கி மூலம் ஆர்வலரும் நிர்வாகியுமான செ. பாலாசி இன்முகத்துடன் வரவேற்றார்.

தீவிர விக்கிப்பீடியரும் சேலம் பயிற்சிப்பட்டறையினை நல்ல முறையில் நடத்தியே தீருவேன் என்று உறுதிகொண்ட ஆர்வலருமான திருமதி பார்வதி சிறீ அவர்கள் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள், விக்கிப்பீடியா மாநாடுகள், மற்றும் விக்கிப்பீடியாவின் இதர கூடல் நிகழ்வுகளின் போது விக்கிப்பீடியா குடும்பத்தின் அங்கத்தினர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய நன்னடத்தை விதி முறைகள் மற்றும் ஆரோக்கியமான நட்புசார் நடைமுறைகளை வாசித்தும் விளக்கியும் ஓர் அர்த்தமுள்ள முன்னுரை வழங்கி நிகழ்ச்சிகளைத் தொடங்கினார்.

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Code_of_conduct

பயிற்சியில் பங்கேற்ற பங்களிப்பார்கள் ஒவ்வொருவரின் தன்னறிமுகம் கலகலப்பாக நிகழ்ந்து முடிந்ததைத் தொடர்ந்து விக்கிப்பீடியர்களுக்கான விக்கி மூலம் பயிற்சிப் பட்டறை இனிதே தொடங்கியது.

08.06.2019

அமர்வு 2:-