உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குக் கதைகள்/புலியின் சிந்தனை

விக்கிமூலம் இலிருந்து


புலியின் சிந்தனை


ஒர் புலி பசியுடன் சென்று கொண்டிருந்தது. திடீர் என்று ஒரு குள்ள நரியைப் பார்த்தது; அதனைப் பிடித்துச் சாப்பிட நினைத்தது.


புலியே, உன் பற்களைக் காட்டாதே. உனக்கு ஏதாவது தொல்லை நேருவதற்கு முன்பே நீ இவ்விடத்தை விட்டு ஓடி விடு. உனக்கு நான் யார் என்று என்று தெரியுமா? நான்தான் காட்டு விலங்குகளுக் கெல்லாம் அரசி என்றது நரி.

முட்டாள் தனமாகப் பேசாதே. நான் தான் காட்டு விலங்குகளின் அரசன் என்பதை அனைவரும் அறிவர் என்று முழங்கியது புலி.

நீ என்னை நம்பாவிட்டால் என்னோடு வா. விரைவில் யார் எவர் என்பதை நீ உணர்ந்து கொள்வாய் என்றது நரி. இரண்டும் காட்டு வழியாக நடந்து சென்றன. அவற்றைக் கண்டு அஞ்சி இதர விலங்குகள் அனைத்தும் இங்கும் அங்குமாக ஓடி மறைந்து கொண்டன.

நரி சொல்வது ஒருகால் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணிய புலி, புதருக்குள் ஓடி மறைந்து விட்டது.