வைகையும் வால்காவும்/ஆளாண்மை
Appearance
காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும் எனவே-நாணாத
சாரின் பகை உவந்தான்! சால்புமிக மக்களரசு
ஊரறியத் தந்தான் லெனின்.
81
வில்லேர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை என்றே-நல்லறிஞர்
கார்க்கி, செகாவ்மாய கோவசுகி போன்றோரின்
சீர்உணர்ந்து நட்டான் லெனின்.
82
எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உள்பகை உள்ளதாம் கேடு எனலால்-மக்கட்கு
அழிவுசெயும் அன்பு இல் அலுவலரை ஐயன்
கழிவுசெய் திட்டான் லெனின்.
83
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்; உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்என்-றுரிமையால்
வேளாளர் தம்மை வியந்தான்! தொழிலாளர்க்கு
ஆளாண்மை தத்தான் லெனின்.
84