உள்ளடக்கத்துக்குச் செல்

வைகையும் வால்காவும்/வடிவாக்கி வார்த்தான்

விக்கிமூலம் இலிருந்து

வடிவாக்கி வார்த்தான்


தன்னைத்தான் காக்கின் சினங்காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம், என்னும்-நன்மொழிக்கே
பாட்டாளி மக்கள் பலரழியச் சீறியசார்
காட்டாகக் கண்டான் லெனின். 29

உள்ளிய தெல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின், என-உள்ளியே
கூட்டுடைமைக் கொள்கை, கைக்கொணட புரட்சிக்கண்
ணோட்டம் உவந்தான் லெனின். 30

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வருமால்-அறம்கொன்றார்
ஏழையா இன்னலில இன்புற்றார், வெங்கொடியா
பீழையுறப் பேர்த்தான் லெனின். 31

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்தலையாம்-வகுத்த
குடியாட்சி எய்திப் பொதுவுடைமைக் கொள்கை
வடிவாக்கி வார்த்தான் லெனின். 32