ஸ்ரீ லங்கா தாயே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கை நாட்டு வணக்கம்
ஆசிரியர்: பண்டிதர் ம.நல்லதம்பி


    ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
    நமோ நமோ நமோ நமோ தாயே

    நல்லெழில் பொலி சீரணி
    நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
    ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
    நறுஞ்சோலை கொள் லங்கா
    நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
    நமதுதி ஏல் தாயே
    நமதலை நினதடி மேல் வைத்தோமே
    நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
    நமோ நமோ நமோ நமோ தாயே

    நமதாரருள் ஆனாய்
    நவை தவிர் உணர்வானாய்
    நமதோர் வலியானாய்
    நவில் சுதந்திரம் ஆனாய்
    நமதிளமையை நாட்டே
    நகு மடி தனையோட்டே
    அமைவுறும் அறிவுடனே
    அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
    நமோ நமோ நமோ நமோ தாயே

    நமதோர் ஒளி வளமே
    நறிய மலர் என நிலவும் தாயே
    யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
    எழில்கொள் சேய்கள் எனவே
    இயலுறு பிளவுகள் தமை அறவே
    இழிவென நீக்கிடுவோம்
    ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
    நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
    நமோ நமோ நமோ நமோ தாயே

"https://ta.wikisource.org/w/index.php?title=ஸ்ரீ_லங்கா_தாயே&oldid=2073" இருந்து மீள்விக்கப்பட்டது