3.கேலிப் படலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

அங்கதக் காவியம்[தொகு]

3.கேலிப் படலம்[தொகு]

என்மகன் சாமி, ஏதோ ஒருநாள்
அத்தை மகளென விளையாட் டாகவே
வேண்டு மென்றோ, ‘வீர லெச்சுமி!
குலுக்கை போலக் குறுகிப் போனாயே!
எருமை போல இளைத்துப் போனாயே!

கவிமணி எனும் பட்டம்

“அன்றைய சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்கள், தேசிகவிநாயகம் பிள்ளையின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி 1940 டிசம்பர் 24-ஆம்நாள், கவிமணி என்னும் பட்டத்தை வழங்கினர். அன்றுமுதல் தமிழகம் தேசிக விநாயகம் பிள்ளையைக் ‘கவிமணி’ என்றே அழைத்தது!” 
- முனைவர் வை.கிருஷ்ணமூர்த்தி, 2007.
பனந்தூர் போலப் பாறிப் போனாயே!
வயிற்றில் உனக்கு மடிப்புகள் எத்தனை?
இன்னும் சிலநாள் இங்கிருப் பாயேல்,
வாசலும் வேறே மாற்றவே வேண்டும்.
குதிலும் வெளியாய்க் கொஞ்சனா ளாச்சுதே!
பந்தய நெல்லும் பாதி யாச்சுதே!
நீங்களும் வந்து நெடுநா ளாச்சுதே!
இந்த ஆடி முழுதுமிங் கிருந்து
புதுநெல் வரினும் போகமாட் டீரோ?
நல்லது, நல்லது, நல்லது அம்மா!
தின்பவ னெல்லாம் தின்பான் போவான்
திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான்!
அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
சேனை எத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யோடு படைப்புப் போட
எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்?
அரசனும் கூட ஆண்டி யாவனே!
இப்படி உண்மை யிருக்க, ‘யாவும்
மக்களுக் காக வாரிக் கொடுத்தான்
கடன்கள் வாங்கினான் கைசீட் டெழுதினான்,
ஒற்றி கொடுத்தான்’ என்றுன் பெற்றோர்
எங்கள் ஐயாவைத் தூற்றுவ தெல்லாம்
உணர்வில் லாமல் உளறுவ தல்லவோ?’
என்று கூறிய மொழிகள் யாவையும்
மங்கை கேட்டு மனம்நொந் தழுது
ஒன்றைப் பத்தாய்ப் பெருக்கி உடனே
தாய்க்குச் சொன்னாள், தந்தையும் அறிந்தார், (35)
பையப் பையப் பாட்டியும் அறிந்தாள்;
யாவரும் கூடி என்கண் மணியை
‘உனக்கிங் கென்ன உண்டடா பயலே?
உடையக் காரியைத் தடைவையோ பயலே?
பத்திர மாயிரு! பழைய காட்டுக்கு
அனுப்பி விடுவேன், அறிநீ பயலே!’
என்றிப் படிநா எழுந்தது சொல்லி
ஏசி வசைகள் பேசிப் பிரம்பால்
ஐயோ! ரத்தஞ் சிந்த அடித்தனர்.
காணா தென்று கண்ணில் மிளகும்
இட்டனர்! இரக்கம் கெட்டவர், பாவிகள்
நடந்ததை யெல்லாம் நன்கறிந் தாலும்
யாதும் பேசா திருப்பர்என் கணவர்.
மூன்றாவது, கேலிப் படலம் முற்றியது[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=3.கேலிப்_படலம்&oldid=452300" இருந்து மீள்விக்கப்பட்டது