பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

39


நமக்குத் தொல்லை தரும் அவற்றால் வருத்தம் வரும் போதெல்லாம் கடவுளின் அன்பில் நாம் நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால் அப்படிப்பட்ட தாங்கொணாத தொல்லைகளும், துயரங்களும் அன்பினால் வந்துற்றவை அல்ல என்பதை இப்போது நாம் அறிகிறோம். ஆனால் அவை எங்கிருந்து வந்தன என்ற வினாவுக்கு ஒரே விடை. நம் நெஞ்ச அரியணையில் வீற்றிருக்கும் அன்பினை அப்புறப்படுத்தும் நமது பகைமை நோக்கத்தியிருந்தும் அதன் ஆக்கத்திலிருந்தும் தான்்.

நம் மனத்தின்கண் கடவுளை நீங்காது நிலைத்திருக்கச் செய்வது வேண்டும் என்பது ஏன்? நம் வாழ்வின் பல்வேறு துறைகளிலும் அன்பு காண வேண்டும் என்பதற்காகத் தான்்! நாம், நம்மில் நம் மாசில்லா மனத்தின் கண் இறைவன் இருக்கின்றார் என்னும் மனச் சான்றினை நாம் பெற்றோம் என்றால் பின்னர், நம்முள் இருக்கும் கடவுளையே நம்பிடலாம். நம்பி வாழ்ந்து - உயர்வு பெறலாம். அதனை, 1 யோவான் 4 : 4 ...... 'உலகத்தில் இருக்கின்றவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்' என்னும் உரையிலிருந்து அறிவோம்.

இயேசுவின் அன்பினைக் கொண்ட நெஞ்சம் கொண்ட நம்மில் ஒரு தூய - துணிவுடமை இருக்கும். இருக்கிறது - அது, இயேசுவின் அஞ்சுதலற்ற துணிவுடமை போன்ற துணையுடமை, நமக்கு என்ன தீங்கு வந்துற்றாலும் அதற்கு நாம் அஞ்சிடத் தேவையில்லை; அது யாதெனினும் அகற்றிட நம்மில் இருக்கும் இயேசு முன் நிற்பார்; முன் நின்று நம்மைத் தடுத்து ஆள்வார். அதோடு அவரது திறம், மன உரம், வலிமை ஆகியவை நம்மில் உள; நம்மில் இயேசுவும் அவரது அன்பும் இருப்பதால்!

அவர்தம் அன்பு, நம்மை, நம் வாழ்க்கைத் தோல்வி எனும் உலகிலிருந்து வெளிக் கொணர்ந்து, 'வாழ்வின் வெற்றி' எனும் பேருலகில் விடுகிறது.

நேர்மை என்னும் பரிசினை நாம் இயேசுவின் அன்பின் மூலம் பெற்றிருக்கிறோம்; இரக்கம் எனும் பெருஞ் செல்வத்தைப் பெற்றிருக்கிறோம். எனவே, அன்பு வாழ்க்கை அல்லது அன்பெனும் உலகில் நாம் மன்னர் போல் அரசோச்சலாம்.

ஊழியக்காரராக - அல்லது கொத்தடிடையாகவே நாம் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் தேவன் கருதியதில்லை. அன்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/43&oldid=1219602" இலிருந்து மீள்விக்கப்பட்டது