பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அன்பு வெள்ளம்


அடிமையாக இருக்கும் நம்மை வேலைக்காரர் அல்லது அடிமை ஊழியக்காரர். நிலையிலிருந்து தம் குமாரர் ஆகிய இயேசுவைப் போல, பிள்ளை எனும் உறவுப் பேருலகில் விளங்கிடச் செய்கிறார்.

அன்பு, நம்மை நம்மில் இருந்துவரும் தாழ்மை உணர்வு நிலையிலிருந்து விடுவித்து, இயேசு கிறித்துவுடன் ஒன்று பட்டிருக்கும் உணர்வினை அளிக்கிறது. திய உணர்வினால் நம்மில் உறைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை அழியப் பெற்று, அந்த நெஞ்சத்தின் அடித்தளத்தில் - அன்பின் பேருணர்வு பிள்ளைமைப் பேருணர்வு இடம் பெற்றிடச் செய்கிறது அன்பு.

அடிமை என்னும் உணர்வு கொண்ட ஒருவர் உள்ளத்தில், பிள்ளைமைப் பற்றார்வ உணர்வின் தன்மையினால் பெறும் மகிழ்ச்சியினை ஒருகாலும் பெற்றிட முடியாது.

இயேசுவின் அன்பைப் பெற்ற நாம், அன்பு வாழ்வும் அதனால் இயேசுவில் ஒன்றியிருப்பதால் நாம் இப்போது ஆண்டைகள், வாழ்க்கையில் வென்று மேம்படும் வெற்றி வீரர்கள்; மேம்பட்டு விஞ்சி நிற்பார்கள்; வாழ்பவர்கள் ஆவோம். இயேசுவின் திறம், இயேசுவின் மெய்யறிவு, இயேசுவின் வலிமை, இயேசுவின் அன்பு, நம்மில் நிறைந்துள்ளது.

இறையருளினால், நாம் உரிமைமிகு மக்கள். நாம் தேவனைப் பின்பற்றுகிறோம். அதனால் தேவன் நம்மில் ஒத்திசைந்து விளங்கு கிறார் என்பதை மனத்தில் ஆழமாகப் பதிப்போம்.

        அன்புநெறி ஒன்றே அறநெறி வாழ்வுக்கே
        இன்பநெறி ஈதொன்று தான்.

அன்பும் அறிவமும்

றிவம் (ஞானம்) என்பது அறிவைப் எப்படி பயன் படுத்துவது என்னும் திறம். நாம் எத்துணை அறிவினைப் பெற்றும் அதனைப் பயன்படுத்திட நமக்குப் போதுமான அறிவும் இல்லையேல் அனைத்துத் துறையிலும் நாம் காண்பது தோல்வியாகத்தான் இருக்கும்.

கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலுமிருந்தும் பல்வேறு பட்டங்கள் பெற்றிடுவோருள் பெரும்பான்மையான ஆடவர் - மகளிர் அவர்கள் தம் வாழ்க்கையில் காணும் தோல்விக்குக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/44&oldid=1515466" இலிருந்து மீள்விக்கப்பட்டது