பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சூப்பிரண்டு : உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள் என்

கடமையை நான் செய்கிறேன்! இரண்டாவது கொற்றன் : சூப்பிரண்டு ஐயா, நாங்கள் கட்டுகிற இந்தக் கோட்டைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள்? சூப்பிரண்டு: யூரியைக் காக்கும் சிறைச்சாலை இது-இதைக் கொண்டே உங்களை அடக்கி வைப்போம்! ஒரு கொற்றன்: யூரிக்குக் காப்பா? (சிரிக்கிறான்.) சூப்பிரண்டு: ஏன் சிரிக்கிறாய்? இரண்டாவது கொற்றன்: இதைக் கொண்டே யூரி மாவட் டத்தை அடக்கிவைக்கலாம் என்ற நினைப்பா? முதல் கொற்றன்: வானை அளாவிய எங்கள் மலைகளின் நடுவில் இதைப் போன்ற கோட்டைகள் எறும்புப் புற்றுகளைப் போலவே இருக்கும்! (சூப்பிரண்டு கோட்டையை நோக்கிச் செல்கிறார்) மேஸ்திரி : பாழாய்ப் போன இந்த வேலைக்குக் கல்லுடைத்த என் சம்மட்டியை ஏரியில் எறிய வேண்டியதுதான் ஆழங்காணுத அடித்தளத்தில் வீசி எறியவேண்டும்! (டெல்லும் ஸ்டாபாச்சரும் வருகின்றனர்.) ஸ்டாபாச்சர் : (சிறைக் கோட்டத்தையும் வேலையாட்களையும் பார்த்து விட்டு)-இந்தக் கோரக் காட்சியை என் கண்களால் பாராமல், முன்பே நான் இறந்திருந்தால் நலம்! டெல்: நாம் இங்கே நிற்பது உசிதமில்லை! இன்னும் சிறிது தள்ளிப் போவோம்! ஸ்டாபாச்சர்: சுதந்திர மணம் கமழும் யூரியில்தான நான் இருக்கிறேன் என்று சந்தேகமாகிவிட்டது ! மேஸ்திரி: ஐயா ! இந்த அரண்களுக்கு அடியிலுள்ள பாதாளச் சிறைன்ய நீங்கள் பார்த்திருந்தால்!-அதற் குள்ளே போனவன் அப்புறம் சூரிய வெளிச்சத்தையே காணமாட்டான் ! ஸ்டாபாச்சர்: அட, கடவுளே !