பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மெல்ச்தல்: சந்திர ஒளி பிரதிபலிப்பதால் அது தோன்று கிறது. கிளாஸ் இது ஒரு நல்ல சகுனம்தான் இப்படித் தோன்று வதே அபூர்வம். கோன்ராடு: அதோ ஒரு படகு மெதுவாக வருகிறது! மெல்ச்தல்: ஸ்டர்பாச்சர் வருகிருன். அந்த வீரன் நண்பர் களைக் காக்க வைப்பதில்லை. = (கோன்ராடுடன் அவன் ஏரிகரைக்குப் போகிருன்.) மெய்யூர், யூரி மாவட்ட ஆட்கள்தான் கடைசியாக வருவார் கள் போலிருக்கிறது. பர்க்ஹார்ட்: மலைகளின் வழியாக அவர்கள் சுற்றி வரவேண்டு மல்லவா? நேர் பாதையில் வந்தால், எதிரிகளுக்குத் தெரிந்துவிடுமே ! (இரண்டு குடியானவர்கள் கட்டைகளை அடுக் கித் தி மூட்டுகின்றனர். ஒடத்திலிருந்து ஸ்டாபாச்சர், ரெடிங், ஹான்ஸ், ஜோர்க் ஹன், உல்ரிச், ஜோஸ்ட் மற்றும் மூன்று குடியானவர்கள் ஆயுத பாணிகளாகக் கரையேறி வருகின்றனர். மெல்சிதலும் கோன்ராடும் எதிர்கொண்டு அழைத்து வருகின்றனர். மற்றவர்களும் வரவேற்கின்றனர். வர்தவர்களும் இருந்தவர்களும் கூடிக் குலவுகையில் மெல்ச்தலும் ஸ்டாபாச்சரும் முன்புறமாக வருகின்றனர்.) மெல்ச்தல்: நான் அவரை என் கண்களால் கண்டு கொண் டேன், ஆல்ை இன் அவரால் என்ன ஒருபோதும் பார்க்க முடியாது! அவர் கண்களை நான் தொட்டுப் பார்க்கும் போது, என் கைகள் நடுங்கின. இரண்டு குழிகளே இருக் கின்றன . உடனேயே பழிவாங்கும். சிந்தனைகள் என் உள்ளத்தில் அலை மோதின! ஸ்டாபாச்சர்: பழிவாங்குகிற பேச்சே வேண்டாம்; பழமைக்குப் பழிவாங்கவேண்டாம், எதிர்காலத்தில் இடையூறு நேராமல்