29 காக்கவே நாம் இங்குக் கூடியிருக்கிருேம். சரி, அந்தர்வால் டனுக்கு நீ போன பிறகு காரியம் எப்படி? குடியானவர்கள் எப்படி யிருக்கிருர்கள் ? மெல்ச்தல்: காடும் மலையும் கடந்து சென்றேன், சூருவளி போல் எங்கும் சுற்றி வந்தேன். எல்லாம் நன்ருகவே இருக்கிறது. குடியானவர்கள் மேற்கொண்டு துன்பப்படத் தயாராயில்லை. நான் போன இடங்களில் எல்லாம் முன்ன் தாகவே அதிகாரிகளின் கொடுமைகள் தெரிந்திருக்கின்றன. என் தந்தை கண்களை அவித்த கொடுமையை என்னிடம் பலர் விசாரித்தார்கள். எங்கள் மாவட்டம் முழுதும் போராட்டத்திற்குத் தயாரா யிருக்கிறது! மக்கள் மலைகளைப் போல் உறுதியாக நிற்பார்கள் ! ஸ்டாபாச்சர்: அதுதான் வேண்டும்! மிக விரைவில் எல்லா இடங்களையும் சுற்றி வந்து விட்டாய்! மெல்ச்தல்: ராஸ்பர்க், ஸார்னன் என்ற இரண்டு இடங்களிலு முள்ள எதிரிகளின் கோட்டைகளையும் உள்ளே புகுந்து பார்த்து வந்தேன். ஸார்னன் கோட்டைக்குள் என் தந்தையின் கண்களைப் பிடுங்கிய கவர்னரைக் கண்ணுல் கண்டேன்; விருந்துண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தான் பாவி அந்தக் கொடியோனைக் கண்களால் மட்டும் கண்டேன்-ஆளுல் அவனைக் கொலை செய்யவில்லை! ஸ்டாபாச்சர் : அந்த அடக்கமான வீரமே நமக்கு வெற்றி யளிக்கும்! (மற்றவர்களும் முன்னல் வந்து சேருகிரு.ர்கள். கொம்பு ஊதும் சத்தம் கேட்கிறது. ஆயுதங் கள் தரித்த பலர் பாறைகளிலிருந்து மளமள வென்று இறங்கி வருகின்றனர்; சிலர் கைகளில் கறுப்பு விளக்குகள் வைத்திருக் கின்றனர்.) சுதருத் : யூரி ஆட்களும் வந்துவிட்டார்கள் ! ரோஸல்மன் : பாதிரியாரும் வந்திருக்கிருர் ! கோன்ராடு : வால்டரும் வந்திருக்கிருர், ஆளுல் வில்லியம் டெல்லை மட்டும் காணவில்லை! (வால்டர், ரோஸல்மன், பீட்டர், ருவோடி மற்றும் ஐவர் வருகின்றனர். மொத்தம்
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/36
Appearance