பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீரா

33


பெறும் அரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. அத்துடன் பேராசிரியர் கேள்வியும் அதற்கு மணவையார் அளித்த பதிலும் மணவை முஸ்தபா மனதில் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தன் எதிர்கால முயற்சிகள் தமிழ் வளர்ச்சியைக் குறியாகக் கொண்டிருந்தபோதிலும் அது வெறும் இலக்கியத் தமிழ் முயற்சியாக அமையாது பிற துறை சார்ந்த தமிழ் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாளடைவில் அழுத்தங் கொள்ளலானார்.

இதன் விளைவாக வகுப்பறையில் சிறப்புத் தமிழ் கற்றாலும் வகுப்புக்கு வெளியே படிக்கும் நூல்கள் பிறதுறை நூல்களாகவே இருந்தன. அவற்றைப் படிக்கும்போதே, இதையெல்லாம் தமிழில் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்க உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாத தாக இருந்தது. இவர் படிக்கும் நூல்களில் அதிகம் இடம் பெறுவது எளிமையான ஆங்கிலத்தில் அமைந்த அறிவியல் நூல்களேயாகும்.

தமிழில் பிறதுறை நூல்கள்

ஒரு சமயம் டாக்டர் ஏ.எல். முதலியார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த 'அறுவை மருத்துவம்' பற்றிய மிகப் பெரிய நூலைப் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேராசிரியர் தெ.பொ.மீ. மணவை முஸ்தபாவுக்குப் பின்புறம் நின்று என்ன படிக்கிறான் என்பதை கவனித்தார். படிப்பு சுவாரசியத்தில் பேராசிரியர் தன் பின்னால் நின்று கவனிப்பதை அறவே அறியாமல் படிப்பிலேயே கவனமாக இருந்தார். இடையிடையே அவர் வாய் தமிழிலில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இதை கவனித்த பேராசிரியர் மணவையாரின் கையிலிருந்த நூலை வாங்கிப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார். மணவையாரை நோக்கி,