பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


என்பது திவ்விய கவியின் திருவாக்கு. கடக இராசி ஆடி மாதத்திற்கு உரியது.

சிங்கம் : ஆண்யானையைப் பெண் யானை யாதோ ஒரு காரணத்தால் (ஊடலால்?) பிணங்கி வருகின்றது. இந்நிலையில் அது வானத்தில் வருகின்ற சிங்க இராசியைக் கண்டு பேரச்சம் கொண்டு தானே வலியச் சென்று ஆண்யானையைத் தழுவுகின்றது.

“ஒண்சிந்து ரத்தைவெறுத் துடும் பிடிவேழம்
விண்சிங்கம் கண்டணைக்கும் வேங்கடமே.”46[1]

(சிந்துரம் - ஆண்யானை; ஊடும் - பிணங்கும்; பிடிவேழம் - பெண்யானை; விண்சிங்கம் - சிங்க இராசி)

என்பது திவ்விய கவியின் அமுதவாக்கு. ஊடுதல் - ஆணுடன் பெண் அன்பு வகையால் சிறிது மாறுபடுதல். இங்ஙனம் வலியக்கொள்ளும் சினம் இன்பத்தை மிகுவிக்கும் என்ற கோட்பாட்டை “ஊடுதல் காமத்திற்கு இன்பம்” (குறள் - 1330) என்ற வள்ளுவத்தால் உணரலாம். சிங்க இராசி ஆவணி மாதத்திற்கு உரியது.

கன்னி : திருமலையில் ஓங்கி வளர்ந்துள்ள மூங்கிலுக்கு நேராய்ப் பெண் வடிவமான கன்னி இராசி வரும்போது கம்பத்தின்மீது ஏறிக் கூத்தாடும் கழைக்கூத்தியை ஒத்திருக்கும்.

“மாதுமடக் கன்னிகழை வந்தணுகில்கம்பத்தின்
மீது நடிப் பாளொக்கும் வேங்கடமே.”47[2]

(மடம் - மடமையுடைய கழை - மூங்கில்)

மூங்கிலின் உயர்ச்சியைக் கூறியதனால் மலையின் வளம் குறிப்பிட்டவாறாகின்றது. கன்னி இராசி புரட்டாசி மாதத்திற்குரியது.

துலா : குறிஞ்சிநிலக் குடிகளாகிய குறவர்கள் வானத்தில் செல்லுகின்ற நிறைகோல் வடிவமான துலா இராசியினிடத்திலே மலையில் ஒளிரும் இரத்தினங்களை வைத்து எடை காண்பார்கள்.


  1. 46. திருவேங்கடமாலை - 18
  2. 47. திருவேங்கடமாலை - 19