பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


அவளும் நகர்கிறாள்.

திறந்த வெளியில் சற்றே நடந்து, கீழ்ப்பக்கத்து சுவரில் சாய்ந்தபடி, சிந்தனை தடுமாற்றத்தை சமாளிக்க முயல்கிறாள். நெஞ்சின் அலைகளுக்கு ஓய்வு தேவை. ஒரு மாறுதலை வேண்டி, தனக்கு வெளியே தெரிந்த உலகத்தை சந்திக்க முனைந்தாள்.

மேற்குத் தாம்பரத்தின் பிலிப்ஸ் மருத்துவமனை. வித்யா தியேட்டர் பகுதிகளில் நெளிந்த அமைதியான இயற்கையின் அழகை நிதானமாக அனுபவிக்க அப்போதும் அவள் தவறி விடவில்லை.

ஆயா அங்கம்மா நின்றாள். அவள் கைகளில், உறைக் கடிதம் ஒன்று ‘தனிப் பார்வைக்கு’ என்ற எச்சரிக்கையோடு காணப்பட்டது.

இப்போது-

அந்த அந்தரங்கக் கடிதம், ரேவதியின் பரிபூரண அந்தரங்கத்துக்குப் பாத்திரமான ‘டூரோஃப்ளக்ஸ்’ மெத்தையில் சல்லாபமாகவோ சரசமாகவோ கிடக்கிறது!

டாக்டர் ரேவதிக்கு மட்டும்தான் இரவு-பகல் என்கிற வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கையின் பொறுப்புகளும், தொழிலின் கடமைகளும் காத்துத் தவம் கிடக்கும் என்பதில்லை.

குமாரி ரேவதிக்கும் அப்படித்தான்!

அப்படியென்றால்....

டாக்டர் ரேவதிக்கும் குமாரி ரேவதிக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாதென்று பொருளா?

'ஊகூம்.. நான் வேற; டாக்டர் ரேவதி வேறதான்! இப்படிப்பட்ட வித்தியாசத்திலேதான், எங்கள் இரண்டு பேரோட உயர்வும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மின்ன முடியுது. ஆனாலும், இந்த உயர்வுப் போட்டியிலே வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்கிற சிக்கலே எங்கள் இரண்டு பேருக்கும் ஊடால நாளது