பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்தை மட்டும் நம்பி!
ச. மெய்யப்பன், எம். ஏ
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் நாவல் இலக்கியம் நலமுடன் வளர்ந்து வருகிறது. சமூக நாவல்கள், பிரச்சினை நாவல்களுடன், தனித்தன்மை சான்ற வட்டார நாவல்களும் வெளிவருகின்றன. பல்கலைக்கழகங்களில் நாவல்கள் பாடநூல் ஆகின்றன. தமிழ் நாவல்களைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் தமிழ் வழங்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வேடுகளாக அளிக்கப் பெற்றுள்ளன. அவற்றில் பல அச்சாகி உள்ளன. நாவல் இலக்கியம் பற்றிய திறனாய்வுகள் ஐம்பதுக்கு மேல் வெளி வந்துள்ளன. நாவலாசிரியர்கள் சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்வதாலும் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதாலும் தீர்வுகள் கூறுவதாலும் சமூகத்தில் இந்நாளில் மதிப்புப்பெற்று வருகின்றனர். காப்பியங்கள் போன்ற பெருநாவல்களும் இப்பொழுது தமிழில் வெளி வருகின்றன. தலைகீழ் விகிதமாக மாத நாவல்களாகிய புற்றீசல்களும் பலவாகத் தோன்றி மறைகின்றன. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படும் மாத நாவல்கள் மிகுந்த பரபரப்புடன் விற்பனையாகி, வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுகின்றன. ராணிமுத்து, இருபது