உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26

இந்திய சமுதாய.../தாய்மையின் வீழ்ச்சி


காரணியாகிறாள். அவளுடைய பரிபூரண சுதந்தரம் இந்த இயல்பைத் தன் ஆளுகைக்குள் வைத்திருப்பதனாலேயே உறுதியாகிறது. ஆனால், தந்தைநாயக மரபு, இந்தச் சுதந்தரத்தை அவளுக்கு வழங்க இடம் கொடுக்கவில்லை.

நில உடமையின் அடித்தளத்தில் இந்த மரபு, அழுத்தம் பெறப் பெற, பெண்ணின் மீது அவர்கள் செலுத்திய ஆதிக்கமும் இறுகலாயிற்று. இராமாயணம் கொண்டுவரும் கற்புநெறி. அறங்கேற்றமாகுமுன், அதற்குரிய அரங்கு ஒழுங்கு செய்யப்படுகிறது. பரசுராமர், ஜமதக்னி, ரேணுகை வரலாறு அத்தகைய முன்கட்ட உச்ச நிகழ்வாகிறது.

‘மாத்ரு ஹத்தி’ அல்லது தாய்க்கொலை, பெண்ணைத் தாயாகப் போற்றவேண்டும் என்ற இந்தியக் கலாசார, மரபுக்கு முள்ளான முரண்பாடாக இருக்கிறது. இந்தக் கலாசார மரபில் இத்தகைய தாய்க்கொலைக்கு ஒத்த முள் போன்ற முரண்பாடாகக் கூறத்தகுந்த நிகழ்வு எதையும் குறிப்பிடமுடியாமல் இருக்கிறது.

எனவேதான், இன்றளவும் தாய்வழிபாடாக, ஒடுக்கப்பட்ட சமுதாயம் தலைதூக்கி நிற்கும் ஆங்காரப்பழிதீர்க்கும் வழிபாடாக இந்தத் தாய்க்கொலை நிகழ்ச்சி உயிர்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆந்திரத்தின் மாதங்கி வழிபாடு, கர்நாடகத்தின் எல்லம்ம வழிபாடு, தமிழ்நாட்டின் ரேணுகாதேவி, எல்லையம்மன் போன்ற பல்வேறு தேவதை வழிபாடுகள் எல்லாமே, இந்தத் தந்தையாதிக்கக் கொடூரக்கொலைகளின் மிச்ச சொச்சங்களின் வடிவு பெற்றவை எனலாம்.

வடகன்னடப் பிரதேசத்தில், சௌதத்திக் குன்றில் குடி கொண்டுள்ள எல்லம்மன் கோயில், பரசுராமன் செய்த தாய்க்கொலையை ஆதாரமாகக்கொண்ட தெய்வத்துக்குரியதாக இன்றளவும் புகழ்பெற்றிருக்கிறது. இத்தகைய புராண, நாடோடிக்கதை வரலாறுகள் மனித சமுதாயத்தை