உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ரசிகமணி டிகேசி


1938 ஆம் வருஷத்துக்கு நான் வாழ்த்த வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தாங்கள் எப்படியும் இங்கே மாற்றி வந்து விடவேண்டும். வட்டத் தொட்டியை அலங்கரித்துப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான்.

தாங்கள் கிறிஸ்துமஸ் ரஜாவில் இங்கே வந்து போவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் தங்களை எப்படியும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். தாங்கள் வந்த இரண்டு தடவையும் நான் இங்கே இல்லாமல் போய்விட்டது வருந்தத்தக்கதே.

தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் தாங்கள் கலந்து கொண்டது ரொம்பவும் சந்தோஷமான செய்தி. நாலைந்து வருஷங்களுக்கு முன் தலைமை வகித்த முறையில் நானும் கலந்துகொண்டேன். அப்போது சைவத்துக்கும் புறம்பல்ல. கம்பராமாயணம் படித்தக் குற்றம் உண்டானாலும் சைவத்தை விட்டுவிட்டு வேறொரு சமயத்துக்குப் போனவன் அல்ல என்று ரொம்பத் தடபுடலாய் விளம்பரப்படுத்திக்கொண்டேன்.

இந்த நையாண்டிக்கெல்லாம் அங்குள்ள சைவ நன்மக்கள் சிரித்துவிடுகிறார்களா? அல்ல. சரி என்று ஒப்புக்கொண்டு சந்தோஷப்பட்டார்கள். யாரோ ஒருவர் இருவர் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டார்கள்.

தாங்கள் இவ்வருஷம் போட்டதோ ஜப்பான் வெடிகுண்டு. ரொம்ப ரொம்ப சமாஜத்தைக் குலுக்கியிருக்கும். தலைவராவது கம்ப துவேஷியாய் இல்லாமற்போனது கொண்டாடத் தகுந்த விஷயம். திருநெல்வேலித் தமிழ் பயப்பட வேண்டிய காரியம் என்று எண்ணுவதற்குத் தாங்கள் மடத்தார் என்று சொன்னது ஒருவகையில் உண்மைதான். இருபது வருஷத்துக்கு முன் திராவிட மகா பாஷ்யம் என்று ஒரு பொக்கிஷம் ஒன்று