இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடிதங்கள்
13
இந்த 1939 ஆம் வருஷம் தமிழுக்கு முக்கியமான வருஷம் என்று சொல்ல நேரும் என்பது என்னுடைய அபிப்பிராயம். ஒன்று தே.வி.யின் கவிகள் வெளிவந்த விஷயம்.அடுத்தது கம்பர் விழாவின் மூலம் கம்பர் பெருமை தமிழ் உலகுக்கு (தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பேச வேண்டாம்) தெளிவாய்த் தெரிய வருவது. இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்துதான் வருஷத்துக்குச் சிறப்புக் கொடுக்க வேணும்.
வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் சௌக்கியந்தானே? இங்கே எல்லாரும் விசாரித்ததாகச் சொல்லவேணும்.
தங்கள்
டி.கே.சிதம்பரநாதன்
❖❖❖