இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடிதங்கள்
41
மாதத்திற்குப் பிறகு நடத்தினால் போதும். கம்பர் விழாவே முதல்முதலில் திருநெல்வேலியில்தான் ஆரம்பித்தது. எப்படியும் அது அங்கு விட்டுப்போகக் கூடாது. தாங்கள் வேண்டும் உதவி செய்ய வேணும்.
தூத்துக்குடியில் 15.3.40 அன்று தாங்கள் பிரசங்கம் நடப்பது பற்றி ரொம்ப சந்தோஷம். இப்படி கம்ப உணர்ச்சியை அடிக்கடி தூண்டுதல் ரொம்ப அவசியம். பால்நாடார் அவர்களுக்கு என் சந்தோஷத்தைச் சொல்லவேணும்.
வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. செல்லையாவுக்கு உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறது. தொண்டைக் கம்மல் மாத்திரம் இருந்து கொண்டிருக்கிறது. அதுவும் சீக்கிரம் தெளிந்துவிடும் என்று டாக்டர் சொல்லுகிறார்கள்.
தங்கள்
டி.கே. சிதம்பர்நாதன்
❖❖❖