உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ரசிகமணி டிகேசி



ஏரோ



மீனம்பாக்கம்

22.1.41


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று இரவு ரேடியோவில் தங்கள் (பேச்சையல்ல) கட்டுரையை நானும் அருணாசலம்பிள்ளை அவர்களுமாகக் கேட்டோம். ஒலிபரப்பு (முதல் விஷயமாக) தெளிவாய் இருந்தது. யாரும் விஷயங்களை எளிதில் கேட்டு உணரும்படியாகவே இருந்தது. பொதுவாகச் சென்னையில் திருச்சி ரேடியோ நன்றாய்க் கேட்பதில்லை. நேற்றிரவு ஆகாயமும் தெளிவுபட்டிருந்தது.

வாசித்தவர் (யாரோ) நிறுத்தி, பாவம் புலப்படும் படியாகவே வாசித்தார். செய்யுள்களை மடக்கி வாசித்துப் புரட்ட நேரம் போதாது என்பது தெரியவந்தது.

நாட்டில் வறட்சியென்ன மழையின் பயன் என்ன என்பதெல்லாம் பட்டினவாசிகளுக்குத் தெரிய முடியாது என்று வழியைத் தூக்கிக் காட்டி விளக்கியது வாய்ப்புதான். மழையை எப்படிக் குடியானவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கக் கோடையைப் புரட்டாசி மாதம் வரையும் நீட்டிவிட்டது. நன்றாய் இருந்தது. பழுத்துக் காய்ந்த தோசைக் கல்லில் விட்டால்தான் நீர்த்துளி சப்தம் போடும். அதாவது பாவமாகப் பேசும்.

மூத்தபள்ளி கொடுக்கிற சாட்டையெல்லாம் ரஸந்தான். கதாநாயகம் நாம் அல்ல என்பதில் நமக்குக் கும்மாளி கூட.

நானும் அருணாசலம்பிள்ளை அவர்களும் கேட்டோம் ரொம்ப அனுபவித்தோம். அதிகமாகவே அனுபவித்திருப்போம். தாங்களே வந்து பேசியிருந்தால் ரேடியோகாரர்