பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, நாகரிக மனப்பான்மைக்கு மாறும் காலமே காப்பிய நிகழ்ச்சிகள் நடந்த காலமாகும். அஃதாவது மனிதனின் ஒழுக்க முறை ஏட்டில் எழுதப்பட்டு அதன்படி நடக்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிற காலமாகும். இதனாலேயே பெருங்காப்பியங்களுள் பெரும்பாலான வற்றில் போர் முதலிடம் பெற்றுவந்தது. நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன், தானே தன் மனச்சாட்சி யின் உதவியால், சமுதாயத்தில் செம்மையாக வாழ வேண்டிய முறையை அறிந்து நடக்கிறான். அங்ங்னம் அவ்ன் தன் மனச்சாட்சியைப் பழக்கு முன்னர், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் வெளியிலிருந்து வற்புறுத்தப் படும் சட்ட திட்டங்களாகவே இருக்கும். இந்நிலையே காப்பிய நிகழ்ச்சிகள் தோன்றச் சிறந்த காலமாயினும், காப்பியும் பாடற்குரிய கவிதை தோன்றாத காலமாகும். பின்னர், அது தோன்றுங் காலத்தில் இந்நிகழ்ச்சிகள் பழையனவாகவும் நம்பத் தகாதன வாகவும் காணப்படலாம். இக்காப்பியத்தை இயற்றும் புலவன் தன்னை மறந்து, தான் எந்தச் சூழ்நிலையில் நின்று பாடுகிறானோ, தன்னை அந்நிலையாகவே மாற்றிக் கொண்டு பாடினால்தான் அதனை நாம் அனுபவிக்க முடியும். பாடலைப் படிக்கும்பொழுது நம்மை அஃது அவ்வுலகிற்குக் கொண்டு செல்ல வேண்டும். சமுதாயம் ஒழுங்கு முறையில் கட்டுப்பெற்று வாழ முற்படுங் காலம் காப்பிய நிகழ்ச்சி நடைபெறு வதற்கு ஏற்ற காலமன்று. சமுதாயம் செம்மையடைந்து விட்டால், மனத்தில் தோன்றிய கருத்துகளை உடனே செயலாக்க இயலாது தடைகள் தோன்றிவிடும். மேலும், மனிதனுடைய வாழ்வு, செம்மை பெற்ற