உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இலக்கிய ஏந்தல்கள் தன்னுணர்ச்சியும் குறையாமல் தத்துவமும் குன்றாமல் வரும் கவிஞர் சோமு’வின் பாட்டுக் குரல் இதோ : இதயக் கூண்டில் ஒரு பறவை இறைதா வென்று கூப்பிடுதே இதயக் கூண்டில் ஒரு பறவை! நினைவுக் காட்டில் சுற்றியபின் நிலவின் அணைப்பில் அயராமல் கனவுக் குமைப்பில் மோனத்தில் கண்ணைமூடித் தனிமையிலே... இதயக் கூண்டில் ஒரு பறவை, அயர்வுக்குப் பின் ஆறுதல் பெறும் நம்பிக்கையைக் கவிஞர், பொழுது புலருமடி-மனப் பூவும் மலருமடி! அழுத இருளெல்லாம்-கண்ணே அகலும் அகலுமடி! என்னும் அடிகளில் தோற்றுவிக்கின்றார். இயற்கை இயற்கை ஒரு வற்றாக் களஞ்சியம். காலந்தோறும் கவிஞர்க்கு வாய்த்த கற்பனை நிதியம். சங்கப் புலவர்க்கு முதலாகிக் கருவாகி முன்னின்றது. செஞ்சொற் புனை மாலை பாடிய ஞானசம்பந்தப் பெருமானுக்கும் சமய குரவர் பிறர்க்கும் கண்டறியாதன காட்டியது. பின்னரும் காவியப் பிரபந்தப் படைப்புகளில் மிளிர்ந்து தவழ்ந்தது. இந்நாளையப் புலவர் பெருமக்கட்கும் விருந்தாகி விஞ்சி நிற்பது. இயற்கைப் புனைவில் சமுதாயக்கருத்துகளை மிடைதல் பாரதிதாசனாரின் திறன். சான்றாக நிலவைப் பாடுங்