உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்டப் படும்.ஒரு நாள்வரு மென்று விசனம் அடைந்தனையோ? அடுத்த இரண்டு அடிகளில் பட்டுப்போகுமுன் இருந்த நிலையும், பட்ட பின்னர் அடைந்த கோலமும் பேசும் கவிஞர், குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்த இலை! வெந்து கருகிட இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ? என்றிசைக்கின்றார். எழில் முற்றும் இழந்ததை, கட்டையெனும் பெயர் உற்றுக் கொடுந்துயர் பட்டுக் கருகினையோ! பட்டை யெனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே! காலப் புயலிற்பட்ட மனிதன் கைநீட்டுவதுபோல் மரம் தோற்றமளிக்கின்றது. பின்னர், பழநாளின் பசுமைத் தோற்றம் வெறும் கனவான திறம், பாடும் பறவைகள் கூடி உனக்கொரு பாடல் புனைந்ததுவும்