உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈட்டி முனை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


மொழி அவன் துணை சொல்லுக்கு உயிர் கொடுப்பது அவன் திறமை, இலக்கியம் அவன் கைக் கருவி. இனிய கீதமிசைக்கும் வேய்ங்குழலாக இலங் கும், அதுவே, சுட்டெரிக்கும் பானமாகவும், சொடுக்கியடிக்கின்ற சாட்டையாகவும், குத்துகின்ற ஈட்டியாகவும், அரித்து அரித்து குறைகள் மீது கசப்பு ஏற்படுத்தும் ஆஸிட்’ ஆகவும் மாறும். வாளினும் வலியது பேனா என்றது உண்மை இலக்கியாசிரியனின் திறமையை உணர்ந்த பேச்சு. பேனா முனையை, மெதுவாக வருடி இன்பம் கிளு கிளுக்கச் செய்கின்ற சிறகு எனக் கருதும் படி யாகவோ, குத்தித் தைத்து ரணமாக்கும் ஈட்டிமுனை என எண்ணும்படியாகவோ இயக்க வல்லவன் இலக் கியாசிரியன். சொல்லின் செல்வன் அவன். சிந்திக் கத் தெரிந்தவன் அவன். சிந்திக்கச் செய்பவன் அவன். இத்தகைய இலக்கிய ஆசிரியர்கள் இன்று அதி கம் தேவை. குத் தும் கிண்டல்கள் ! தைக்கின்ற நையாண்டிச்சொற்கள் ! கதையல்ல அளப்பல்ல ! - சமுதாயத்தின் சிறுமைகளைச் சிரித்துச் சிரித்துச் சமாதியாக்க சுட்டிக் காட்டும் சீரிய சிந்தனைகள் நாசகாரக் கும்பல்! ஆசிரியர்: நையாண்டி பாரதி

       தயாராகிறது 

சாந்தி நிலைய வெளியீடாக !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/30&oldid=1370264" இலிருந்து மீள்விக்கப்பட்டது