18 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே தானே இருக்கிறோம். இந்த உடலியக்கம் (Movement) போதாதா? என்பது பலர் கூறும் விவாதம்! 'வாழ்வு நடத்த வேலைகளைச் செய்து தானே தீர வேண்டும்! வேலைகளைச் செய்யும் பொழுதே, உறுப்புக்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன? எதற்காகத் தனியாக உடற் பயிற்சி' என்பது இன்னும் சிலரின் வேடிக்கையான ஒலம். 'நாங்கள்தான் காலை மாலை ஒடி ஆடி விளையாடுகின்றோமே! பந்தாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகின்றோமே! அதனால் விளையாடுகின்றவர் களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை' என்று விளையாட்டு வீரர்கள் கேட்கின்ற சுவையான கேள்வி மழை! உண்மைதான்! உடல் இயங்குகிறது. உறுப்புக்கள் செயல்படுகின்றன. ஆனால், வேற்றுமை இருக்கிறதே அவைகளில்! விளக்கம் தந்தால் புரியுமே! உடலியக்கம் வேறு உடலை வருத்திச் செய்கின்ற வேலை வேறு விதவிதமாக ஆடும் விளையாட்டு வேறு. அதோடு வாழ்வைச் சிறப்புற நடத்திச் செல்லும் உடற்பயிற்சியும் வேறு. - ஒவ்வொன்றிலும் ஒற்றுமை இருப்பதுபோலத் தோன்றினாலும், நோக்கம் மாறுபட்டிருக்கிறது; செயல் முறையும் வேறுபட்டிருக்கிறது.
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/20
Appearance