உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா விளையாடும்போது, தன் திறமையை, தன் தகுதியைப் பிறர்க்கு எவ்வாறு காட்ட வேண்டும், உணர்த்த வேண்டும், எதிரியை எவ்வாறு மடக்க வேண்டும். அடக்க வேண்டும் என்ற எண்ணங்கள்தான் ஓங்கியிருக்குமே தவிர, அங்கு உடலைப் பற்றிய எண்ணமே வருவதில்லை. விளையாட்டு நடக்கும் பொழுதும் சரி, முடிந்த போதும் சரி, உடலைப் பற்றிய கவலையே அங்கு தலைகாட்டுவதில்லை. உடற் பயிற்சி செய்யும் பொழுது மட்டுந்தான். உடலைப் பற்றிய நோக்கம், ஏக்கம், ஊக்கம், உற்சாகம் அத்தனையும் மேலோங்கி நிற்கிறது. உடற் பயிற்சியை செய்ய நினைக்கும் போதும் சரி, உடற் பயிற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போதும் சரி, உடற் பயிற்சியைச் செய்து முடித்து தன்னுடம்பைக், கண்ணாடி முன்னே நின்று கண்டு மகிழும் போதும் சரி உடலே அங்கு பிரதானமாக விளங்குகிறது. உடலே கவர்ச்சி காட்டும் கலையாகக் காட்சியளிக்கிறது. நினைவெல் லாம், நிலையெல்லாம், தொழில் எல்லாம் உடல் மீதே நிலைத்து நிற்பதால்தான், உடலைப் பற்றிக் கவலைப்படுவது உடற்பயிற்சி என்கிறோம்! உடலுக்குக் காவலன், உடல் நலம் பாடும் பாவலன், உடலுக்குத் தேவையானதை தேடித் தரும் ஏவலன் உடற் பயிற்சியே யன்றி வேறெதுவாக இருக்க முடியும்? -