உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 43 காய்ந்து, உப்பை அங்கேயே விட்டுவிடுகிறது. கழிந்து போன தோலின் பகுதிகள், வெளி உலகின் அழுக்கு, தோலில் உள்ள எண்ணெய் ப் பசையுடன் சேர்ந்து கொள்ள, பிசுபிசுப்பும் ஒருவிதத் துர்நாற்றமும் உண்டாகி விடுகிறது. இதனால்தான் உடற்பயிற்சிக்குப் பிறகு குளிக்க வேண்டும் என்பது. இல்லையேல் உடல் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடுமே! உடற்பயிற்சியால் தோல் சிறந்த பயனைப் பெறுவதால்தான், உள்ளுறுப்புக்கள் செழிப்படைவதால் தான், உடல் மினுமினுப்பும் வண்ணமும் பெற்று விளங்குகிறது. (6) தேவையானால் உடலுக்கு எடையையும், தேவையற்றபோது தசைகளைக் குறைத்தும் உடற்பயிற்சி உடலை உன்னத நிலையில் வைக்கிறது. உடலுக்கு எடை வேண்டும் என்கிற பொழுது, பசியை அதிகமாக்கி, அதிக ஆகாரம் உட்கொள்ளச் செய்து, ஜீரண உறுப்புக்களை இயக்கி, உடலில் எடையை அதிகமாக்கும். ஆங்காங்கே, தசைகளை விருத்தி செய்து, உடலுக்கு நல்ல தோற்றத்தையும், ஆண்மையையும் அளிக்கும். - - தேவையில்லாத கொழுப்பை, ஊளைச் சதைகளை ஒழித்துக் கட்டுவதிலும் உடற்பயிற்சி வல்லது. தசைகளில் முக்கால் பங்குக்கு மேல் தண்ணிர்தானே! கொழு கொழுத் தசைகளில் உள்ள தண்ணிர் வியர்வையாக மாறி வெளியேறும் போது, தசை
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/45
Appearance