உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முனனுரை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன். உடற்பயிற்சி என்றாலே பிடிக்காத ஒன்றை, விரும்பாத பொருளைப் பார்ப்பவர்கள் முகம் சுளிப்பதைப் போல, உடற்பயிற்சியை எதிர்த்து உலா வருகின்ற மக்களிடையே, இந்த நூலை உலவவிட்டு இருக்கிறேன். நமது முன்னோர்கள் வாழ்ந்த காலம், இருந்த சூழ்நிலை, குடும்ப அமைப்பு, உண்ட உணவு, தின்ற மருந்து, எல்லாமே, ஒரு கட்டுக்கோப்புக்குள் இருந்தன. கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.

நமது முன்னோர்கள் உடலுக்கு உழைப்பை முதலிடமாகத் தந்தார்கள் பிறகு 'மிதாசனி' (அளவோடு உண்ணுதல்) என்பதை இரண்டாவதாகக் கடைப்பிடித்தார்கள். மூன்றாவதாகத்தான் மருந்து என்று பயன் படுத்திக் கொண்டார்கள். அதாவது. 1. உடற்பயிற்சி, 2.உணவு 3. மருந்து

என்பதாக அமைந்து இருந்தது. ஆனால், நாம் வாழும் காலம் கலிகாலம் என்பதால், தலைகீழ் காலமாகவும் மாறிவிட்டது. கை நிறைய மருந்து, வாய் நிறையப் பத்திய உணவு வைத்தியரின் எச்சரிக்கைக்குப் பிறகு, உடலுக்குப் பயிற்சி என்று வருத்தப்பட்டு செய்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

உங்களது உடல், உருக்குலைந்து போய்விடும். உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் புறப்பட்டுவிடும், என்று மருத்துவரால், பயமுறுத்தப்பட்டு, பணத்தைத் தண்ணிராய் இறைத்துச் செலவழித்து, உடலுக்குச் செய்கிற பயிற்சிகள்தான் உயிர்காக்கும் தோழன் என்ற பாடத்தை நமது இக்கால மக்கள் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

உடற்பயிற்சி என்பது, உடலை உருக்கி, உறுப்புக்களைக் கசக்கி, தசைகளை பிழிந்து செய்கிற காரியம் அல்ல. உடல் தசைகளை, பதமாகப் பிடித்துவிடுகிறது. இரத்தத்தை ஒருவித ரிதமாக ஓடச்செய்கிறது. நரம்புகளை இதமாகச் செயல் படவைக்கிறது. ஒரு மனிதனை, உடல், மனம், ஆத்மா என்ற