பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முப்பரிமாணத்தை மேன்மையாக வளர்த்து ஒரு முழு மனிதனாக உருவாக்கி விடுகிறது. உடற்பயிற்சி என்பதை யாரும் செய்யலாம். எந்த வயதிலும் செய்யலாம். எனக்கு வயதாகிவிட்டது. அதனால் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். என்று கேட்டுக் குறுக்குச் சால் ஒட்டும் கோமாளிகளும் உண்டு. - - வயதாகிவிட்டது என்று வயிற்றுக்கு உணவு அனுப்புவதை யாரும் நிறுத்திவிடுவதில்லை. தொடர்ந்து சாப்பிட்டுத் தொந்தரவு படுவதைக் கூட அவர்கள் பிறப்புரிமை என்று கருதுகிறார்கள். வயதாகிவிடும் போது, உண்ணும் உணவைக் குறைத்துக் கொள்வதுபோல, உடற்பயிற்சியின் அளவைக் கூட நாம் குறைத்துக் கொள்ளலாம். - - 'உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் என்கிற இந்த நூலில், உடற்பயிற்சி என்றால் என்ன? எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்? உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? வயதிற்கேற்ற உடற்பயிற்சிகள் எவையெவை? உடல் வளர்ச்சிக் கேற்ற உடற் பயிற்சிகள் எவையெவை என்பதை எல்லாம், சுருக்கமாகவும், அதே சமயத்தில் தெளிவாகவும் தந்து இருக்கிறோம். உடலுக்காகப் பயிற்சி செய்பவன் பயில்வான் ஆகிறான். அறிவுக்காகப் பயிற்சி செய்கிறவன் வித்வான் ஆகிறான். ஆத்மாவிற்காகப் பயிற்சி செய்கிறவன் மகான் ஆகிறான். மகான் என்பவன் நல்லமனிதன் இந்த மூன்றையும் வளர்ப்பவன் முழு மனிதன். ஒவ்வொருவரையும், முழு மனிதராகச் சந்திக்கவே, அந்த உயர்ந்த நிலையைச் சிந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தின் காரணமாகத்தான், நூற்றுக்கு மேற்பட்ட உடலியல் சம்பந்தமான, பயிற்சி நூல்களை எழுதிக்கொண்டு வருகிறேன். இந்த நூல் உங்களுக்கு உதவும், என்கிற நம்பிக்கையுடன், உங்களுக்கு வழங்குகிறேன். அன்புடன் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா