உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உலகத் தமிழ்


வைத்தனராம். மூல்டானில் ஏற்கனவே அமுதம் நிறைந்துள்ளது. மேற்கொண்டு அமுதத்தைக் கொள்ள இடமில்லை” என்று அதன்முலம் உணர்த்தினராம். குருநானக் வெகுளவில்லை; மணமுள்ள சிறிய மென்மலர் ஒன்றை அப்பாலின்மேல் இட்டு, பால் சிந்தாமல் திருப்பி அனுப்பினராம்.

தொடர்பு?

மனித வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு - அமுதம் - தமிழில் நிறைந்திருக்கிறது. மற்றவர்கள் போட்டியைப் பற்றியே கருத்தையெல்லாம் அழியவிடுவதற்குப் பதில் அவ்வமுதத்தை உண்டு, தெளிவும் தெம்பும் பெற்று ஆக்கப் பணிகளில் ஈடுபடுவோம் என்று உறுதி கொண்டேன்.

அக்கருத்தோட்டத்தைக் கலைக்க வந்தாள் கன்னி.

“என்ன குடிக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே நின்றாள் விமானப் பணிமங்கை. “ஒன்றும் வேண்டா” என்று தலையாட்டினேன். “ஒன்றுமே வேண்டாவா? சேம்பெய்ன், வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின், பீர்-” இவற்றுள் ஏதாவது கொஞ்சம் கொடுக்கட்டுமா? என்றாள். மீண்டும். எதுவும் வேண்டாவென்று நான் கூறியது அவளுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை. "ஆரஞ்சுச் சாறாவது குடியுங்கள்" என்று கொண்டு வந்து வைத்து விட்டாள். சிறிது நேரத்தில் சிற்றுண்டி கொடுக்கப்பட்டது. இப்போது அது சிற்றுண்டியே.

சிற்றுண்டி பரிமாறிய பின், தட்டு முட்டுச் சாமான்களை எடுத்து வைத்துவிட்டு, அம்மங்கை பயணிகளோடு உரையாடினாள்; என்னிடமும் உரையாடினாள். “எங்கே போகிறீர்கள்? எத்தனே நாள் இருப்பீர்கள்?” என்பதிலே உரையாடல் தொடங்கிற்று. “என்ன அலுவல்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/11&oldid=480372" இலிருந்து மீள்விக்கப்பட்டது