பக்கம்:உலகத்தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விண்ணிலே தமிழ்

13

என்ற கேள்விக்குப் போயிற்று. நான் யாரென்று அறிந்ததும், “பம்பாய் மாநிலத்தில் கல்வி இயக்குநராக இருந்த மூல் என்பவரைத் தெரியுமா? அவரது சொந்தக்காரி நான். மூல் குடும்பங்கள் சிலவே” என்று கேள்வியும் அறிவிப்பும் சேர்ந்து வந்தன. அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநராக இருந்தவர். “அவரைப் பார்த்தறியேன், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றதும் மகிழ்ந்தாள். இப் பணிமங்கையோ பம்பாய் பல்கலைக் கழகப் பட்டதாரி; முதுகலை இலக்கியப் (எம். ஏ.) பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருக்கையில் இப் பணிக்கு வந்து விட்டாளாம். இலக்கிய ஆர்வம் இன்னும் நீடிக்கிறதாம். சிற்சிலபோது, திங்கள் இதழ்களுக்குக் கட்டுரை எழுதித் திருப்தி அடைவதாகத் கூறினாள். தமிழ் நாட்டில் கல்வி விரைந்து பரவியுள்ளதாகப் பாராட்டினாள். தமிழ் நாட்டு மாணவர்கள் அமைதியாக இருப்பவர்கள் என்றும் புகழ்ந்தாள். மாண்டிசாரி பள்ளிகளில் அவளுக்கு ஆசையாம். அவை பல ஏற்பட வேண்டும் என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டாள்.

பல நிமிடங்கள் ஓடின. காந்தாரத்திகுத் தெற்கே பறப்பதாக விமானமோட்டி கூறவும் சாளரததின் வழியே பார்த்தோம். பல நூறு கிலோ தூரம் பொட்டல் காடாகக் காட்சியளித்த மலைப்பகுதிகளைக் கண்டுவந்த எங்களுக்கு, காந்தாரம் பசுமையாகக் காட்சி தந்தது. இதிகாச காந்தாரி நொடிப்பொழுது நினைவில் வந்து மறைந்தாள். மீண்டும் பச்சை தோன்றா நிலப் பரப்பு. டெஹ்ரான் வரும்மட்டும் அப்படியே. டெஹ்ரானைச் சுற்றியும் பாலைக் காட்சியே. பெட்ரோல் வளத்தால் வளர்ந்துள்ள நாகரிக நகரம் அது. வானத்திலிருந்து பார்க்கையில் புதிதாகவும் ஒழுங்காகவும் கட்டப்பட்ட நகரமாகத் தோன்றிற்று விமான நிலையத்தைச் சுற்றிச் சோலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/12&oldid=480373" இலிருந்து மீள்விக்கப்பட்டது