உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உலகத் தமிழ்


நாங்கள் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தோம். கீழே கண்ணுக் கெட்டிய தூரம் வெள்ளை வெளேரென்று மேகக் கடல். விமானத்திற்குச் சில அடி உயரத்தில் கருமேகம். இரண்டையும் சுட்டிக்காட்டிச் சிறுவன் சிரித்தான்.

இஸ்தான்புல் நகரத்தின் மேல் 900 கிலோ வேகத்தில் பறக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. அதை எட்டிப் பார்த்துவிட்டு, தந்தையிடமிருந்த நிலப் படத்தில் அந்தரைக் காட்டும்படி கேட்டான். தந்தை படத்தை விரித்தார். சிட்னியைக் காட்டினர். சிங்கப்பூரைக் காட்டினார். வந்த வழியெல்லாம் காட்டிக் கொண்டு . வந்தார். சிறுவன் இயல்பாகக் கற்றான்; எளிதாகக் கற்றான். பத்து வயதுப் பையனான பிறகே நில நூல் பாடத்தில் முதல் முதலாகச் சிட்னியையும் சிங்கப், பூரையும் பற்றிக் கேட்கப் போகிற எங்களுர்ப் பையன் பின்தங்காமல் என் செய்வான்?

ஆஸ்திரேலியர் நான்கு வயது மகனைக் கட்டிப் போடாமல், இங்கும் அங்கும் நின்று காணவும் கேட்கவும் கற்கவும் பொறுமையாக உதவினார். துணை நின்றார், கைக்குழந்தையையும் அப்போதைக்கப்போது ஏந்தி விளயாட்டுக் காட்டிவந்தார். நம் காட்டுத் தந்தையர்களும் இப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மனைவியின் பொறுப்புகளில் பங்கு ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

டெஹ்ரானுக்கம் பிராங்க்போர்ட்டிற்கு மிடையில் மீண்டும் ‘தண்ணி’; அப்புறம் பகல் உணவு. மாமிச உணவுத்தட்டை எனக்குக் கொடுக்கமுயன்றார் நான், மரக்கறி உணவினன்’ என்றேன். சில நிமிடங்கள் கழித்து வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/17&oldid=480458" இலிருந்து மீள்விக்கப்பட்டது