உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. வீழ்ந்தும் எழுந்த ஜெர்மானியர்

பிராங்க்போர்ட் என்றதும் பலருக்கு இக்காலத்தில் துணைக்கருவிகள் பல நினைவிற்கு வரும். விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்காக வரி விதிக்காத கடைகள் உண்டு. மது வகைகளேப் பலர் வாங்கிக் கொண்டு போவர். புகைப்படக் கருவிகள், படங்காட்டும் கருவிகள், நாடாப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றை நம்மவர் வாங்க முயல்வர். இவை எதிலும் எனக்கு அக்கறை இல்லை. எனவே, நான் கடைகளில் காலத்தைச் செலவழிக்கவில்லை. குழுமியுள்ள மக்களைக் கவனித்தேன்.

பிராங்க்போர்ட் பெரிய விமானச் சந்திப்பு! குறிப்பிட்ட ஒரு நிமிடத்தில் பல ஊர்களுக்கு விமானங்கள் புறப்படுவதைக் கண்டேன். அன்று சரியாக நான்கு மணிக்கு முன்று ஊர்களுக்கு வானவூர்தி புறப்பட்டது. ஊர்தி புறப்பாட்டு அறிவிப்புக்காக மக்கள் துடிப்போடு காத்திருப்பதே ஒரு காட்சி. அங்கு எல்லா நாட்டு மக்களையும் சில மணி நேரத்தில் கண்டுவிடலாம். சமுதாய இயல் ஆய்வாளர்களுக்கு பிராங்க்போர்ட் விமானப் பயணிகள் தங்குமிடம் சிறந்த ஆய்வுக்கூடம். எத்தனே வகையான ஆண்கள் எத்தனே வகைத் தோற்றங்களில் பெண்கள்!

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது தலை முடியை ஒழுங்காக வெட்டிக்கொள்ளாத மாணவர்களின் முடியைப் பற்றி, 'சோதாப் பையன் சிங்கக் குட்டிக் கிராப்' என்று குறிப்பிடுவது உண்டு. பிராங்க்போர்ட்டில் அத்தகைய கிராப் தலைகள் பலவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/19&oldid=480479" இலிருந்து மீள்விக்கப்பட்டது