உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

உலகத் தமிழ்

மக்களின் தேவைகளை விளக்கிச் சொற்பொழிவு ஆற்றி நிதி திரட்டினர். அது மட்டுமா? அவர் மேலை நாட்டு இசையில் வல்லுநர்; அதிலும் பேரறிஞர் பட்டம் பெற்றவர். எனவே இசைக் கச்சேரிகள் பல நடத்தியும் பணம் திரட்டினர். இவையெல்லாம் என் மனக்கண் முன் விரைந்தன.

அன்றொரு நாள், அமெரிக்கச் சிறுவன்-பன்னிரண்டு வயதுப் பையன்-முன்னின்று தொடங்கிய ’லாம்பரின் நிதி’ யை இத்தாலிய நாட்டு விமானத்தில் சென்று அப் பெரியவரிடம் ஒப்படைத்த செய்தியும் படமும் நினை விற்கு வந்தன.

"தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வதற்காவும் தொந்தரவு கொடுப்பதற்காகவும் மன்னியுங்கள்' என்ற பீடிகையோடு, பல இலட்சம் ரூபாய்களை டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சரிடம் பணிவோடு அச்சிறுவன் வழங்கிய படம் நம் சென்னைச் செய்தித் தாளிலும் வெளியானது. பெருந்தொகையைக் கொடுக்கும் சிறுவனுக்கும் பணிவாகக் கொடுக்கக் கற்றுக் கொடுத்துள்ள மேனாட்டுப் பண்பினை எண்ணி எண்ணிப் பூரிப்பதுண்டு நான். மாறாக, முறையற்ற வேண்டுகோளோடு போகும் போதும் விறாப்போடு செல்லும் போக்கினேயும் கண்டு கண்டு, பணியுமாம் என்றும் பெருமை’ என்னும் திருக் குறள் ஏட்டுச் சுரைககாய்தானோ என்று ஏங்குவதும் உண்டு. இத்தனை எண்ணங்களும் நல்ல பருவத்துக் குற்றால அருவியெனப் பொழிந்தன.

அவ் வித்தகர் டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சரின் நுண்மாண் நுழைபுலம் நெஞ்சை பள்ளிற்று. தத்து வத்தில் பேரறிஞர், மேனாட்டு இசைக் கலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/25&oldid=480551" இலிருந்து மீள்விக்கப்பட்டது