உல்லாசப் பயணம்
43
சீல் வைத்து, கடைக்குக் கடை விற்கிறார்கள். எந்த நேரம் எந்த விட்டிற்குப் போனாலும் , டப்பாச் சாறுகளைப் பெறலாம்.
ஜினிவாவிலிருந்து ஆரஞ்சுச் சாறும் அன்னாசிச் சாறும் கொண்டுவந்திருந்தோம். அன்னாசிச் சாறு அருந்தி விட்டு நாங்கள் அருகில் இருந்த ஏரிக்குச் சென்றோம். படகுத் துறையொன்றுக்குச் சென்று மிதி படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம. திருமதி சிதம்பரநாதனும் செல்வன் குமாரும் முன்னே அமர்ந்து படகை மிதித்து ஒட்டினர். நானும் நண்பரும் பின்னே இருந்து திட்டமிட்டோம். அன்னசிக்கு வரும் வழியெலலாம் பேசிக்கொண்டு வந்தும் திட்டம் தீட்டுதல் முடிய வில்லே. அதைத் தொடர்ந்தோம். படகில் அப்படி யென்ன திட்டம் அது? நல்ல திட்டமே, சதித் திட்டமன்று, ஆக்கத் திட்டமே; அழிவுத் திட்டமன்று.
மேலே வெயில்; ஆயினும் இளங்காற்று சில்லென வீசி மகிழ்வித்தது. படகுப் பயணத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம்; மக்கள் வெயில் காயும் துறையை ஒதுக்கி விட்டு, பிற துறைகளைக் கண்டு மகிழ்ந்தோம். பொடிச் சிறுவரும் சிறுமியரும் ஏரியில் முழ்கி நீந்தி விளையாடக் கண்டோம். கீழே பாத்தோம். ஆழக் குறைவு மட்டுமன்று; மணற் பாங்கான நிலம் துணைபுரிவது தெரிந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் கரையோரத்திலுள்ள தொண்டிக் கடற்கரைப் பகுதியில் நெடுந்துாரத்திற்குக் கடல் ஆழமற்றிருப்பதாகக் கேள்வி. அங்கே மாணவ மாணவியர் நீராடி மகிழ வாய்ப்புகள் செய்ய வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன் நினைத்தது உண்டு. சோவியத் ஒன்றியத்திலுள்ள ஆர்டெக் மாணவர் பாசறையைக் கண்ட