46
உலகத் தமிழ்
வேண்டும், தவறினால் அபராதம் அங்கேயே விதிக்கப்படும். வேறு பேச்சுக்கு இடமில்லை. இரண்டாவது முறை காசு போட வேண்டிய நேரத்தில் அவர் விமான நிலையத்திற்குள் இருந்து விட்டார்.
படபடப்போடு காசு போட்டுக் கொண்டிருக்கையில் திரு. சுந்தரம், அமைச்சர் இருவரையும் தம் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார். மாண்புமிகு திரு. மதியழகன் காரின் (மன் இடத்தில் அமர்ந்தார். அவர் தமது வலக்கையை மேலே உயர்த்தி வைத்திருப்பதைக் கவனியாமல் கதவைச் சாத்தினார் சுந்தரம்.
‘ஆ! என்று கேட்டதும் விரைந்து கதவைத் திறந்தார். அமைச்சரது வலது கையில் நடுவிரல் காயம் பட்டிருந்தது. அமைச்சர் கோபப்படவில்லை. “விரலில் வேறு பக்கம் அழுத்தியிருந்தால், எலும்பு முறிந்திருக்கலாம்; இவ்வளவோடு விட்டதே!” என்று எங்களுக்கு ஆறுதல் கூறினர்.
விமான நிலைய மருத்துவ நிலையத்தில் மருந்து இட்டு, ஒட்டுப் போட்டுவிட்டுப் புறப்பட்டோம். ஒய்வெடுக்காமல், ஜினிவாவைச் சுற்றி வந்தோம். வெறிச்சோடியிருந்த கடைத் தெருவின் வழியாக ஏரிக் கரைக்குச் சென்றோம். ‘பொங்கு புனலை’க் கண்டு பூரித்தோம்; மலர்க் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.
ஜினிவா நகரத்தில் பார்க்க வேண்டிய காட்சிகளுள் ஒன்று மலர்க் கடிகாரம். கடிகார முகம் மலர்ச் செடிகளாலும் புற்களாலும் அமைக்கப்பட்டது. எண்களையும் மலர்களாலேயே அமைத்துள்ளனர். அதன் அடியில், நிலத்தில் பாதுகாப்பாக, கடிகாரக் கருவியை புதைத்து வைத்துள்ளனர். அதோடு சாதாரண கடிகாரத்தில்