உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கிட்டாத ஒன்றாகவே இருந்திருக்கின்றன. பிரபுக்களும், பெருந்தனக்காரர்களுமே இப்படிப்பட்டப் போட்டிகளில் பங்கு பெற்று மகிழ்ந்தனர்.

திட்டமிட்டு நடத்தப்படாத உடற்கல்வியானது, பலர் கூடி மகிழும் சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கின்றன. அதற்கான சான்றுகளைத்தான் தமது காவியங்களில் ஹோமர் மிக அழகாக விவரித்திருக்கின்றார்.

இலியட் காவியச்சான்று:

இலியட் என்ற காவியம், கிரேக்கர்களுக்கும் டிரோஜன் நாட்டினருக்கும் (Trojans) இடையே நடந்த பெரும் போரைப்பற்றி விளக்கிக் கூறுவதாகும்.

அந்த நூலில் ஒரு பகுதியில் பெட்ரோகிலியஸ் (Petrocleus) என்ற மாவீரன், போரீல் இறந்துபடுவதையும், அவனுக்காக நடைபெறும் இறுதிச் சடங்கினைப்பற்றியும், அதற்காக அரங்கேறிய விளையாட்டுப் போட்டிகள் பற்றியும் ஹோமர் விளக்கியுள்ளார்.

பெட்ரோலியஸ் போரில் கொல்லப்பட்டபிறகு கிரேக்க வீரர்கள், அந்த மாவீரனுக்காக இறுதிமரியாதை செலுத்துகிறார்கள். காளைகளையும், அவர்கள் வென்ற நாடுகளிலிருந்து சிறை பிடிக்கப்பட்டுக்கொண்டு வந்த அடிமைகளையும் பலிகொடுத்த பிறகு, மரணச்சடங்கு (Funeral Games) விளையாட்டுக்கள் மிகவிமரிசையாக நடைபெற்றன.

தேரோட்டப் போட்டிகள், ஓட்டப்போட்டிகள், குத்துச் சண்டை, மல்யுத்தம், வேலெறிதல் போன்ற போட்டிகள் மறைந்த மாவீரனை மகிமைப் படுத்துவதற்காக நடத்தப்பட்டன.