உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

17


அதாவது மல்யுத்தம், கனமான பொருட்களைத் தூக்கி எறிதல், ஓடுதல், தாண்டுதல், வேல் எறிதல், தட்டெறிதல், நீச்சல், வேட்டையாடுதல், குத்துச் சண்டையும் மல்யுத்தமும் கலந்த பங்கராஷியம் என்ற போட்டி, சில பந்து விளையாட்டுக்கள் முதலியன.

அவர்கள் அதிகமாக அக்கறை காட்டிய போட்டியானது மல்யுத்தம் தான். அதற்கான அடிப்படைக் காரணங்களும் இருந்தன.

1. உடலானது திறம் நிரம்பி திண்மையாக விளங்குவது முதல் காரணம்.

2. அந்த ஆற்றலுடன் ஆண்மை கொண்ட தேகமானது, எதிர்த்துவரும் எதிராளிகளைத்துக்கி எறியவும், தோல்வியுறச் செய்யவும் உதவுகிறது என்பது இரண்டாவது காரணம்.

ஸ்பார்ட்டா இளைஞர்கள் பெற்ற உடற்கல்விப் பயிற்சிகளானது, மகிழ்ச்சி பெறுவதற்காக அல்ல. இராணுவத்திற்கு ஆள் தயாரிப்பு செய்திடத்தான் என்பது தான நிதரிசனமான உண்மை.

அதற்காக, அந்த மாணவ இளைஞர்கள் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டார்கள். வன்மையாக அடிக்கப்பட்டார்கள். அவர்கள் வேதனை என்ன என்பது பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற கொள்கையுடன், அரசு அவர்களை கொடுமையான பயிற்சிகளைக் கொடுத்து, கடுமையுவாழக் கற்றுக் கொடுத்தது.

சில சமயங்களில், மாணவர்களுக்கு நடனமும் கற்றுத் தந்தார்கள். அந்த நடனமும் அவர்களை இராணுவ ரீதியில் செய்வதற்காகவே அமைந்தன. இந்த நாட்டியங்கள் பலவகைப் பட்டனவாக இருந்தன.ஜிம்னாட்டிக்ஸ் திருவிழா நடனம்; இராணுவ நடனம் என்பதாகப் பிரிக்கட்பட்டிருந்தன.