உலக நாடுகளில் உடற்கல்வி
19
முறைகளிலும் வல்லுநர்கள் ஆகின்றார்கள், அவர்கள் அடிக்கடி போர் ஒத்திகைகளிலும், தந்திர யுக்தி முறைகளிலும் தங்களுக்குள் போரிடுகின்ற பாவனைகளையும் மேற்கொண்டு, பக்குவம் அடைகின்றார்கள்.
பதினெட்டிலிருந்து இருபது வயது வரையில் அவர்கள் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கடுமையான தேர்வுகள் மூலமும், சோதனைகள் மூலமும் கண்டறிந்து, அதன் பிறகே, அவர்கள் ஆற்றலைப் பயன்படுத்த அரசினர் திட்டமிடுகின்றார்கள்.
இப்படிப்பட்ட இடர்பாடுகளிலும் இரக்கமற்ற பயிற்சிகளிலும் ஈடு கொடுத்து வந்த இருபது வயது இளைஞர்கள், தற்போது 7 வயது பாலகர்களைப் பயிற்று விக்கும் பொறுப்பில் அமர்த்தப் படுகின்றார்கள். அவர்களது அரிய பணி, அதிலிருந்து 30 வயது வரை தொடர்கின்றது.
முப்பதிலும் முனைப்புகள்
வயது முப்பது நிறைந்த மனிதர்கள், மாபெரும் வீரர்களாக மாற்றப் படுகின்றார்கள். அவர்கள் தங்கள் தாயகத்திற்காகத் தம் உயிரையும் தருவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இராணுவப் பயிற்சி முறைகளையும் மென்மேலும் கற்றுக் கொண்டு, வரப் போகின்ற யுத்தங்களில், தங்களது வல்லமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். .
எதாவது ஒரு உணவு விடுதியில் உணவைப் பெற்று அவர்கள் உண்டாலும், அவர்களது இராணுவப் பயிற்சி முறைகள், காலையிலும் மாலையிலும் தங்கு தடையின்றித் தொடர்கின்றன. 15 பேர்கள் அடங்கிய ஒரு உணவு விடுதியில் அவர்கள் உணவு பெற்றாலும், அந்தப் பற்றாக் குறை உணவில் கூட ஒரு பகுதியை நாட்டுக்காக சேமித்து