உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அர்ப்பணிக்கின்ற அரிய தியாகத்தையும் அவர்கள் செய்தாக வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சூழ் நிலைகளிலும், அவர்களுக்கு ஓர் உரிமையும் வழங்கப் பட்டிருந்தது. அந்நாட்டில் இருக்கின்ற அடிமைகளில் எவரினாலாவது அபாயம் ஏற்படக் கூடியசூழ்நிலை அமைந்தால், அவர்கள் அந்த அடிமையைக் கொன்றுவிடலாம். எனவே, தாய்நாடு தான் அவர்களின் உயிர் மூச்சாக இருந்தது என்றுகூட நாம் கூறிவிடலாம்.

முப்பதும் மனப்பதும்:

முப்பது வயது நிறைந்த ஒரு வீரன், இந்த நாட்டு சட்ட சபை அமைப்பில் ஓர் அங்கத்தினராக ஆகிவிடுகிறான். அத்துடன், அவன் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறான்.

அந்தத் திருமணத்தில் அவனது தலையாய கடமை, நாட்டுக்காகக் குழந்தைகளைப் பெற்றுத் தரும் பெரும் பணியாகும்.

அவன் கல்யாணம் செய்து கொண்டாலும், பிரம்மச்சாரி போன்ற வாழ்வைத் தான் அவன் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எங்கோ ஓர் உணவு விடுதியில் உண்டு விட்டு, இடம் கொடுத்திருக்கும் பொதுப் பள்ளிகளுக்குள்ளே ஓர் அறையில் உறங்கி வாழ்கின்ற அவன், எப்பொழுதோ அபூர்வமாக மனைவியைப் போய் தனியே சந்திக்க, மகிழ அனுமதிக்கப்படுகிறான்.

இவ்வாறு, அவன் 50 வயது வரையிலும் ஓர் இயந்திர மான இராணுவ வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்கிறான். இந்தக் காலம் முழுவதும் அவன் போரிட்டுக் கொண்டும், சிறுவர்களுக்கு உடற்பயிற்சிகளைப் போதிக்கும் பொறுப் பேற்றுக் கொண்டும் எஞ்சியிருக்கும் 20 ஆண்டுகளையும் கழித்து விடுகிறான்.